இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் அதிரடியான வீரர் என்பதில் சந்தேகமில்லை. இவர் இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8586 ரன்களை எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 251 போட்டிகளில் விளையாடிய சேவாக் 8,273 ரன்களை எடுத்துள்ளர்.
சேவாக் செய்யும் பேட்டிங் ஸ்டைல் முகவும் அற்புதமாக இருக்கும். சமீபத்தில் சேவாக் அளித்த பேட்டியில் ; இந்திய வீரர் ரிஷாப் பண்ட் அடுத்த டெஸ்ட் போட்டியின் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 40 பந்தில் 77 ரன்களை எடுத்துள்ளார், மற்றும் 3வது ஒருநாள் போட்டியிலும் 62 பந்தில் 78 ரன்களை அடுத்துள்ளார்.
அவரது பங்களிப்பு இந்திய அணியின் தொடர் வெற்றி முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. அவரது அபாரமான ஆட்டத்தை பார்த்தால் சில ஆண்டுகளுக்கு முன் என்னை பார்ப்பது போல் இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான அனைத்து தொடர் போட்டியிலும் அவரது பாசிடிவ் பக்கம் தெரிந்துள்ளது.
அவர் ஒருநாள் போட்டியில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார் ரிஷாப் பண்ட், அவர் அதனை சரியாக பயன்படுத்தி பல ரன்களை குறைவான பந்தில் அடிக்கும் திறன் ரிஷாப் பாண்ட் – யிடம் இருக்கிறது. அது இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்.
இந்திய அணியில் இவர் இருப்பது மிகவும் முக்கியம். அவரது பேட்டிங் திறன் அப்படியே என்னை போல் இருக்கிறது. அடுத்தவர்கள் யார் என்ன சொன்னாலும் அதனை பற்றிய கவலையும் அவருக்கு இல்லை. அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அவர் அதனை சரியாக பயன்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார் சேவாக்.
ரிஷாப் பண்ட் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சேர்ந்தவர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடிப்பட்டதால் அவரால் மீதமுள்ள ஒருநாள் போட்டியிலும் மற்றும் ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியானது. அதனால் யார் டெல்லி அணியின் கேப்டன் என்று கேள்வி எழுகிறது. ஒருவேளை ரிஷாப் பண்ட் ஆக கூட இருக்கலாம் என்று சமுகவலைத்தளங்களில் கருத்தை பதிவு செய்து வருகின்றனர் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள்.