வருகின்ற ஐபிஎல் 2021 , ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பிக்க போகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் முதல் சில போட்டிகளில் மக்கள் யாரும் அனுமதி இல்லை என்று பபிசிசிஐ கூறியுள்ளது.
ஆஸ்திரேலியா எதிரான போட்டியில் ரிஷாப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் அடுத்த தோனியாக வருவாரோ என்று பலர் கேள்வி எழுப்பினார். ஏனென்றால் தோனியை போலவே கீப்பிங் மற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் இவரிடம் உள்ளது என்பதால்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் விக்கெட் கீப்பரான பார்திவ் பட்டேல் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; ரிஷாப் பண்டிடம் அதிகமான நம்பிக்கை இருக்கிறது. அதனால அவரது மனநிலையை சந்தேகமே படத்தேவையில்லை.
சமீபகாலமாக தோனியையும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரையும் சேர்த்தி சமூகவலைத்தளங்களில் பரவலாக கருத்துக்கள் பரவி வருகின்றது. அதனால் தோனியை போல செயல் பட வேண்டும் என்று அவர் நினைக்க தேவை இல்லை.
எனக்கு தெரிஞ்சு தோனியை விட திறமையான வீரர் தான் ரிஷாப் பண்ட், அதுமட்டுமின்றி ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடிபட்டதால் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் தான் என்ற அறிவிப்பும் வந்துள்ளது. அதனால் இந்த வாய்ப்பை அவர் நன்கு பயன்படுத்த வேண்டும் என்பது என்னுடைய ஒரு வேண்டுகோள் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்திவ் பட்டேல் கூறியுள்ளார்.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் ஏப்ரல் 10 ஆம் தேதி போட்டியில் எதிர்கொள்ள போகின்றனர். இரு அணிகளும் இப்பொழுது மும்பை மைதானத்தில் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.