தோனி இல்லை ; ரோஹித் சர்மா இந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும் ; பார்திவ் பட்டேல் ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் 3 – 0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டியிலும், 4 – 1 என்ற கணக்கில் டி-20 போட்டிகளிலும் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் :

கடந்த ஆண்டு ஐசிசி டி-20 2022 உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு தொடங்கிய கேப்டன் பற்றிய சர்ச்சை. அதில் இருந்து அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி பெரிய அளவில் பேசப்பட்டது. அதில் ஐபிஎல் போட்டிகளில் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.

அதனால் மற்ற வீரர்களை காட்டிலும் ரோஹித் ஷர்மாவுக்கு அதிக அனுபவம் உள்ளதால் அவருக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. அதில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி அனைத்து விதமான சீரியஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஒரு கேப்டனாக அணியை வழிநடத்துவது மட்டும் வேலையில்லை. அதேநேரத்தில், வீரர்கள் சரியாக விளையாடாத நேரத்திலும் ஆதரவாக இருக்க வேண்டும். அதுதான் கேப்டனின் உண்மைத்துவம். அதில் தோனி , விராட்கோலி-க்கு பிறகு இப்பொழுது ரோஹித் சர்மா அனைத்து வீரர்களையும் ஆதரித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் அவேஷ் கான் பவுலிங் மோசமான நிலையில் இருந்தது தான் உண்மை. முதல் இரு போட்டிகளில் சொதப்பலாக விளையாடி வந்த நிலையில் அவரை ஆதரித்து தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வந்தார் ரோஹித் சர்மா.

சரியாக நான்காவது டி-20 போட்டியில் அவேஷ் கான் 4 ஓவர் பவுலிங் செய்து 17 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றியுள்ள காரணத்தால் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் என்ற பட்டத்தையும் வென்றுள்ளார். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்திவ் பட்டேல் கூறுகையில் ;

“நான் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா தலைமையில் நான் விளையாடியுள்ளேன். அதில் எனக்கு அவருடன் (ரோஹித்) பிடித்த ஒரே விஷயம் வீரர்களை ஆதரித்து பேசுவது தான். ஒரு வீரர் சரியாக விளையாடவில்லை என்றாலும் செய்தியாளர்களிடமும் அவரை விட்டுக்கொடுக்காமல் பேசுவார்.”

“இதே போன்ற ஒரு விஷயம் தான் அவேஷ் கானுக்கு நடந்தது. ஆமாம் தொடர்ந்து மோசமான நிலையில் விளையாடி கொண்டு இருந்த அவேஷ் கானுக்கு ஆதரவு கொடுத்த காரணத்தால் நான்காவது போட்டியில் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் படத்தை வென்றுள்ளார். எப்பொழுது ரோஹித் சர்மா விளையாடி கொண்டு இருக்கும்போது அவரது உள்ளுணர்வுகளை வைத்து முடிவுகளை எடுப்பார்.”

“போட்டியின் போது இக்கட்டண சூழ்நிலை ஏற்படும்போது சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை கையில் எடுப்பார். அதனால் தான் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளனர். அதுமட்டுமின்றி ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி ; ஆசிய கோப்பை, நீடஹாஸ் போன்ற கோப்பைகளை கைப்பற்றியுள்ளது இந்திய என்று கூறியுள்ளார் பார்திவ் பட்டேல்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here