முதல் டி-20 போட்டிக்கான சுருக்கம் :
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். இந்த போட்டி பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.


முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங் அமையவில்லை. அதுமட்டுமின்றி மொத்தம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் மோசமாக விளையாடி வந்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6விக்கெட்டை இழந்த நிலையில் 190 ரன்களை அடித்தனர்.
அதில் ரோஹித் சர்மா 64, சூரியகுமார் யாதவ் 24, ரிஷாப் பண்ட் 14, ஹர்டிக் பாண்டிய 1, தினேஷ் கார்த்திக் 41, ரவிச்சந்திரன் அஸ்வின் 13 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 191 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.


இந்திய அணியை விட மோசமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சரியாக பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்த நிலையில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் வெறும் 122 ரன்களை மட்டுமே அடித்தனர். அதிலும் மாயேர்ஸ் 15, ப்ரூக்ஸ் 20, பூரான் 18, போவெல் 14 ரன்களை அடித்துள்ளனர்.
அதனால் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி. இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் வெற்றியை பற்றி பேசிய கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் ; “முதல் போட்டி கொஞ்சம் கடினமாக தான் இருந்தது, தொடக்கத்தில் பேட்டிங் செய்யும்போது ஷாட்ஸ் அடிக்க முடியாமல் இருந்தது.”
“முதல் 10 ஓவர் முடிந்த நிலையில் இந்திய அணி 190 ரன்களை அடிக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. உண்மையிலும் இந்திய வீரர்களை பாராட்ட வேண்டும். இன்னும் சில தவறுகள் அணியில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.”


“அவரது (தினேஷ் கார்த்திக்) பேட்டிங் மிகவும் அருமையாக இருந்தது. அணியில் நடக்கும் தவறுகளை விட முயற்சிகளை ஊக்குவித்தால் அது அணிக்கு சிறப்பாக அமையும். அதுமட்டுமின்றி எங்களுக்கு ஆதரவு கொடுக்க ரசிகர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்கள் கொடுக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”
நாளை இரவு இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டவாது டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது போட்டியிலும் வெல்லுமா இந்திய ?