ரோஹித் சர்மா செய்ய போகும்..! மிகப்பெரிய சாதனை ; என்ன அது தெரியுமா ? முழு விவரம் ;

0

ஐபிஎல் 2021; ஐபிஎல் டி20 லீக் போட்டிகள் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அன்றே கோலாகலமாக தொடங்கியது. ஆனால் கிரிக்கெட் வீரர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் உடனடியாக அனைத்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் நெகட்டிவ் என்ற முடிவுகள் வந்தவர்களை மட்டுமே அவரவர் வீட்டுக்கு வழி அனுப்பிவைத்தது பிசிசிஐ.

முதலில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்னும் 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில் இன்று 30வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளனர்.

இதற்கிடையே இந்திய அணியின் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க உள்ளார். அப்படி என்ன சாதனை ? இதுவரை எந்த ஒரு இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் அந்த சாதனையை படைக்கவில்லை.

ரோஹித் சர்மா மட்டும் இன்னும் மூன்று சிக்சர் அடித்தால் 400 சிக்ஸர் அடித்த பெருமை ரோஹித் ஷர்மாவுக்கு சேரும் அதுவும் டி-20 போட்டிகளில் மட்டும். இதுவரை இந்த மாதிரி யாருமே செய்ததில்லை. இன்றைய முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் அடிப்பார் என்று எதிர்பார்த்தால் அவர் முதல் போட்டியில் விளையாடவில்லை.

இதுவரை ரோஹித் சர்மா 111 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டி-20 போட்டிகளில் மட்டுமே 2864 ரன்களை அடித்துள்ளார். அதிலும் 4 சதம் மற்றும் 22 அரைசதம் அடித்துள்ளார் ரோஹித் சர்மா.ஐபிஎல் 2021: இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா 250 ரன்களை விளாசியுள்ளார்.

அதில் அதிகபட்சமாக 63 ரன்களை அடித்துள்ளார். இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகளில் 10 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு எதிர்கொண்ட பிரச்னைகளை சமாளித்து இந்த முறை கோப்பையை கைப்பற்றுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். இதுவரை ஐபிஎல் சீசன்களில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது சிஎஸ்கே.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here