கடந்த ஆண்டு தோல்வி..! இந்த ஆண்டு என்ன செய்ய போறீங்க ? பத்திரிகையாளர் கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித் சர்மா ; முழு விவரம் இதோ ;

0

ஆசிய கோப்பை 2022 போட்டிகள் நேற்று முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு தொடங்கிய போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இரு அணிகளும் விளையாடினார்கள். அதில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வென்றுள்ளது. அதனால் புள்ளிபட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளனர்.

இந்திய மற்றும் பாகிஸ்தான் :

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது.. கடந்த ஆண்டு உலகக்கோப்பை டி-20 லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்.

அதற்கு பதிலடி கொடுக்குமா இந்திய ? நேற்று இரவு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதில் பல கேள்விகள் எழுப்பப்பட்டது, அப்பொழுது கடந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்தது.

இன்னும் நீங்க வெள்வீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா ? என்று ரோஹித் சர்மாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்பொழுது பதிலளித்த ரோஹித் சர்மா ; “இங்க பாருங்க, எனக்கு நியாபக மறதி அதிகமாக உள்ளது. அதனால் ஒரு வருடத்திற்க்கு முன்பு நடந்த விஷயத்தை என்னால் நியாபகம் வைத்திருக்க முடியாது.” என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித் சர்மா…!

கடந்த ஆண்டு இதே மைதானத்தில் தான் இந்திய அணியை உலகக்கோப்பை டி-20 லீக் போட்டிகளில் வென்றது பாகிஸ்தான். அதேபோல இப்பொழுதும் அதே மைதானத்தில் மீண்டும் ஆசிய கோப்பையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளனர். பாகிஸ்தான் அணியை வென்று தக்கபதிலடியை கொடுக்குமா ? இந்திய ?

இந்திய அணியின் முன்னேற்றம்:

கடந்த ஆண்டு இறுதியில் உலகக்கோப்பை டி-20 2021 லீக் போட்டிகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி வென்றுள்ளது இந்திய.

அதனால் இந்த ஆண்டு உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது..! கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற ஆசிய கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தான் தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here