இப்படி விளையாடினால் தோல்விதான் வரும் ; என்ன சொன்னாலும் அதில் பயனில்லை ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

0

நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இந்த போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

அதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருப்பினும் சூர்யகுமார் யாதவை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 151 ரன்களை அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதில் ரோஹித் சர்மா 26, இஷான் கிஷான் 26, சூர்யகுமார் யாதவ் 68 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி.

அதில் தொடக்க வீரரான டூப்ளஸிஸ் குறைவான ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தாலும், பின்பு விராட்கோலி மற்றும் அனுஜ் ராவத் போன்ற இருவரின் அதிரடியான ஆட்டத்தால் 18.3 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த பெங்களூர் அணி 152 ரன்களை அடித்தது.

அதில் டூப்ளஸிஸ் 16, அனுஜ் ராவத் 66, விராட்கோலி 48,தினேஷ் கார்த்திக் 7, க்ளென் மேக்ஸ்வெல் 8 ரன்களையும் அடித்துள்ளார். இதுவரை 4 போட்டிகளில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து போட்டியில் தோல்வியை பெற்று புள்ளிபட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.

போட்டிக்கான தோல்வியை பற்றி பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் ; “இரு வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் தான் சிக்கல், எந்த பிட்ச்-க்கு எந்த வீரர் சரியாக இருக்கும் என்பதை சரி பார்த்திருக்க வேண்டும்.”

“எங்கள் அணியின் பேட்டிங் இன்னும் வலுவாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி எங்கள் அணியில் சில முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் அணியில் இல்லை. அதனால் இருக்கும் வீரர்களை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். நானும் இந்த முறை அதிக ரன்களை அடிக்க வேண்டும் என்று தான் நினைத்தேன்.”

“ஆனால் எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழந்துவிட்டேன். நானும் இஷான் கிஷான் பார்ட்னெர்ஷிப் செய்து 50 ரன்களை அடித்தோம், பின்னர் விக்கெட்டை இழந்தது தான் கஷ்டமாக உள்ளது. இந்த பிட்ச் -ல் 150 சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் சூர்யகுமார் யாதவ் அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு விளையாடினார்.”

“சூர்யகுமார் யதாவுக்கு தான் பெருமை சேரும். இருப்பினும் 150 ரன்கள் நிச்சியமாக போதுமான ரன்கள் இல்லை என்பது எங்களுக்கு நன்கு தெரியும். அதனால் முடிந்த வரை இனிவரும் போட்டிகளில் எங்கள் பேட்ஸ்மேன்கள் அனைவரும் பேட்டிங் செய்வதில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.”

“கடந்த போட்டியில் 160 ரன்களை அடித்தோம் , ஆனால் இன்று 150 தான், நிச்சியமாக இது சரியாக இருக்காது என்பது தெரிகிறது. நான் பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கை பற்றியும் தான் பேசுகிறேன். நாங்கள் பிளான் செய்ததில் சில தவறுகளை செய்துவிட்டோம், ஆனால் இனிவரும் போட்டிகளில் அப்படி இருக்காது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்சமாக 5 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆமாம், ஆனால் இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது தான் உண்மை. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு என்ன காரணமாக இருக்கும் ?

உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..! கிரிக்கெட் ரசிகர்களே..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here