HomeTrending Newsவீடியோ ; கடுப்பில் கத்திய ரோஹித் சர்மா ; இந்திய அணியின் பவுலர் செய்த விஷயத்தால்...

வீடியோ ; கடுப்பில் கத்திய ரோஹித் சர்மா ; இந்திய அணியின் பவுலர் செய்த விஷயத்தால் சூடான ரோஹித் ; காரணம் இதுதான்

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

வேறு வழியில்லாமல் இந்திய அணி பேட்டிங் செய்தது. ஆனால், எந்த போட்டியிலும் இல்லாத அளவிற்கு கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவின் ஆட்டம் அதிரடியாக இருந்தது தான் உண்மை. தொடர்ந்து பவுண்டரிகளை விளாசிக்கொண்டே இருந்தனர். அதுமட்டுமின்றி ஓவருக்கு 10க்கு மேற்பட்ட ரன்களை குவித்தனர்.

ஆனால் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் தொடர்ந்து விக்கெட்டை இழந்த பிறகு இந்திய அணிக்கு பின்னடைவானது. அதுமட்டுமின்றி சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்டிய பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 181 ரன்களை அடித்தது இந்திய. அதில் கே.எல்.ராகுல் 28, ரோஹித் சர்மா 28, விராட்கோலி 60, சூரியகுமார் யாதவ் 13, ரிஷாப் பண்ட் 14 போன்ற ரன்களை அடித்துள்ளனர். பின்பு 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாக்கிஸ்தான் அணி.

தொடக்க வீரர் மற்றும் கேப்டனான பாபர் அசாம் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தார். ஆனால் நவாஸ் மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவரின் பார்ட்னெர்ஷிப் பெரிய அளவில் இருந்தது. தொடர்ந்தது பவுண்டரிகளை விளாசிக்கொண்டே இருந்தனர்..!

அதனால் இறுதிவரை விளையாடிய பாகிஸ்தான் அணி 182 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் 18வது ஓவரில் ரவி பிஷானி வீசிய பந்தை எதிர்கொண்டார் ஆசிப் அலி. அப்பொழுது அவர் அடித்த பந்தை சுலபமாக பிடித்திருக்க வேண்டிய கேட்ச் தான். ஆனால் அர்ஷதீப் சிங் அதனை தவறிவிட்டார் , அதனால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி கேட்ச் -ஐ-தவறவிட்ட காரணத்தால் ரோஹித் சர்மா ஆக்குரோசமாக கத்திய வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. அர்ஷதீப் சிங் செய்தது சரியான விஷயம் தான ? அவர் கேட்ச் பிடிக்காதது தவற ? உங்கள் கருத்து என்ன ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img