HomeTrending Newsஇந்த காரணத்தால் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலக போவது உறுதி தான் ;...

இந்த காரணத்தால் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலக போவது உறுதி தான் ; முகமத் ஹபீஸ் பேட்டி ;

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை 2022 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஹாங் காங் மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் பங்களாதேஷ் அணி லீக் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது.

அதுமட்டுமின்றி இன்று இரவு 7:30 மணியளவில் நடைபெற போட்டியில் ஹாங் காங் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளனர். இந்த போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெரும் அணி தான் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெரும். தோல்வி பெரும் அணி வெளியேறிவிடும்.

கடந்த ஆண்டு இறுதியில் இருந்து இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை, இங்கிலாந்து, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் , ஜிம்பாபே போன்ற தொடரில் விளையாடி வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.

அதனை தொடர்ந்து இப்பொழுது ஆசிய கோப்பை போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகிறது இந்திய. இதுவரை பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகளை எதிர்த்து விளையாடி வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய. அதனால் சூப்பர் 4 சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளனர்.

ரோஹித் ஷர்மாவிற்கு முன்பு விராட்கோலி தான் இந்திய அணியின் கேப்டனாக விளையாடி வந்தார். ஆனால் அவரால் சரியாக ரன்களை அடிக்க முடியாமல் போனது. அதனால் கேப்டன் பதவியின் அழுத்தம் தான் அதற்கு காரணம் என்று பலர் கூறிவந்தனர். இப்பொழுது ரோஹித் ஷர்மாவும் அதே நிலைமையில் தான் இருக்கிறாரா ?

ஆசிய கோப்பையில் இதுவரை விளையாடிய ரோஹித் சர்மா 12, 21 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதனால் கேப்டன் பதவியின் அழுத்தம் தான் காரணமாக இருக்குமா ? இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான முகமத் ஹபீஸ் சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார்.

அதில் ” ஹாங் காங் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடும் போது ரோஹித் சர்மாவின் நம்பிக்கை இல்லாமல் தான் நின்று கொண்டு இருந்தார். அவர் போட்டியை பற்றி பல யோசனையிலும், கஷ்டத்திலும் இருக்கிறார். ஆனால் இதற்கு முன்னாள் இருந்த ரோஹித் சர்மா அப்படி இல்லை ? அதிரடியாக விளையாடி ரன்களை அடிக்க கூடிய வீரர் தான்.”

“அதனால் எனக்கு தெரிந்து ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் அதிக நாட்கள் தாக்கு பிடிக்க போவதில்லை. ஏனென்றால் அவரது விளையாடு மிகவும் சோர்வாக இருக்கிறது. இந்த பிரச்சனை தான் அனைவருக்கும் நடைபெற்று கொண்டு வருகிறது. நானும் அந்த சூழ்நிலையில் இருந்திருக்கிறேன். ரோஹித் சர்மா எப்பொழுதும் போட்டியை ரசித்து கொண்டு விளையாடுவார், ஆனால் அது இப்பொழுது கிடையாது என்று கூறியுள்ளார் முகமத் ஹபீஸ்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img