நேற்றுடன் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் 3 – 0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றியை கைப்பற்றியுள்ளது. நேற்று இரவு 7 மணியளவில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது….!
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்களை அடித்தனர். அதில் ரோஹித் சர்மா 56, இஷான் கிஷான் 29, சூர்யகுமார் யாதவ் 0, ரிஷாப் பண்ட் 4, ஸ்ரேயாஸ் ஐயர் 25, வெங்கடேஷ் ஐயர் 20, அக்சர் பட்டேல் 2, ஹர்ஷல் பட்டேல் 18, தீபக் சஹார் 21 ரன்களை அடித்துள்ளனர்.
பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி. ஆனால் தோல்விதான் மிஞ்சியது. ஏனென்றால் இறுதி வரை போராடி அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து வெறும் 111 ரன்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது நியூஸிலாந்து அணி.
அதில் மார்ட்டின் குப்டில் 51, மிச்சேல் 5, சாப்மேன் 0, க்ளென் பிலிப்ஸ் 0, டிம் செரிபெர்ட் 17, ஜேம்ஸ் நீஷம் 3, மிச்சேல் சான்ட்னர் 2, ஆடம் மிலன் 7, இஷ் சொதி 9, ட்ரெண்ட் பெல்ட் 2 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி.
இதில் ஐபிஎல் 2021 போட்டிகளில் அதிக ரன்களை அடித்த இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை. ஆமாம் ..! முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதால் சீரியஸ் -ஐ கைப்பற்றியது இந்திய அணி.
அதனால் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் ரோஹித் சர்மா அப்படி வழங்கவில்லை…! ஏனென்றால் சமீப காலமாக இஷான் கிஷான் சொல்லும் அளவுக்கு விளையாடுவது இல்லை, ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியிலும் அவருக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.
ஆனால் குறைவான ரன்களை அடித்து ஆட்டம் இழந்தார். அதேபோல, தான் நேற்று நடந்த போட்டியிலும் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷான் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் களமிறங்கினார்கள். ஆனால் சொல்லும் அளவுக்கு ரன்களை அடிக்கவில்லை, வெறும் 29 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார் இஷான்.
ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் -க்கு வாய்ப்புகள் இப்பொழுதெல்லாம் கொடுக்கப்படுவதே இல்லை ??? ஏன் ?? ஒருவேளை அடுத்த ஐபிஎல் 2022 போட்டியில் அவரது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், நிச்சியமாக இந்திய அணியில் நிரந்திரமான இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது…
ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்த்த வீரர்களை (இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ்) ஆகிய இருவரையும் அதிகமாக பாதுகாத்து கொண்டு வருகிறாரா ?? ரோஹித் சர்மா ??