HomeTrending Newsஇதோட ரோஹித் சர்மா போதும், டி-20 போட்டியின் கேப்டனாக இந்த பையன் இருக்கட்டும் ; ...

இதோட ரோஹித் சர்மா போதும், டி-20 போட்டியின் கேப்டனாக இந்த பையன் இருக்கட்டும் ; ஷோயிப் அக்தர் பேட்டி ;

ஆசிய கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளில் இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நான்கு அணிகள் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அதனால் விறுவிறுப்பான போட்டிகள் நடைபெற்று வருகிறது. சமீப காலமாக இந்திய அணியின் கேப்டனாக யார் இருந்தாலும் ரன்களை அடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஆமாம், விராட்கோலி கேப்டனாக விளையாடிய நேரத்தில் மோசமான நிலையில் பேட்டிங் செய்து கொண்டு வந்தார்.

அதனால் தான் அவராகவே கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பின்பு இப்பொழுது அனைத்து விதமான போட்டிகளிலும் ரோஹித் சர்மா கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். பல அழுத்தத்தை சந்தித்து கொண்டு வரும் ரோஹித் சர்மாவும் எதிர்பார்க்கும் அளவிற்கு ரன்களை அடிப்பதில்லை என்பது தான் உண்மை.

ஆசிய கோப்பை போட்டிகளில் 12, 21,28 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதனால் கேப்டன் பதவியின் அழுத்தம் தான் ரோஹித் சர்மாவின் போர்மிற்கு தடையாக இருக்குமோ என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. அதேபோல இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷோயிப் அக்தர் ரோஹிட் சர்மாவிற்கு பதிலாக இந்த வீரர் கேப்டனாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் இதனை பற்றி பேசிய அக்தர் கூறுகையில் ; “எனக்கு தெரிந்து ரோஹித் சர்மா கேப்டனாக திணறிக்கொண்டு இருக்கிறார். அதனால் தான் இப்பொழுதெல்லாம் சரியாக பேட்டிங் செய்வதும் இல்லை. ஆனால், ஹர்டிக் பாண்டிய காயத்திற்கு பிறகு இப்பொழுது சிறப்பாக விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் 2022ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி வெற்றிபெற வைத்துள்ளார்.”

“எனக்கு தெரிந்து நிச்சியமாக டி-20 போட்டிகளில் ஹர்டிக் பாண்டிய இந்திய அணியின் கேப்டனாக இருந்திருந்தால் நிச்சியமாக இந்திய அணிக்கு பலமாக இருக்கும் என்று கூறியுள்ளார் அக்தர்.” காயம் குணமடைந்த பிறகு ஹர்டிக் பாண்டியாவின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

ரோஹித் ஷர்மாவிற்கு பிறகு ஹர்டிக் பாண்டிய இந்திய அணியின் கேப்டனாக இருந்தால் எப்படி இருக்கும் ? ஐபிஎல் போட்டியை போலவே சிறப்பாக வழிநடத்துவாரா இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img