இவரை முதல் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியே எடுங்க…!! ரசிகர்கள் ஆவேசம்.. யார் அந்த வீரர் தெரியுமா ??

ஐபிஎல் 2021, 12வது போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. அதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மகேந்திர சிங் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தனர்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 189 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 143 ரன்களை மட்டுமே எடுத்ததால் 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்பொழுது சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியளில் இரண்டாவது இடத்திலும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6வது இடத்தில் உள்ளது.

இதுவரை சிஎஸ்கே அணி மூன்று போட்டிகளில் விளையடியுள்ளனர். அதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியையும், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியையும் கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு நன்கு தெரியும்.

ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 தொடக்கத்தில் இருந்து சிறப்பான முறையில் விளையாடி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை விளையாடிய மூன்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் இருந்து இப்பொழுது வரை ருதுராஜ் ஆட்டத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை.

முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் -க்கு எதிரான போட்டியில் 5 ரன்கள், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியும் 5 ரன்கள் மற்றும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் மட்டுமே அடித்துள்ளர். அதனால் இனிமேல் அவருக்கு பதிலாக வேறொரு வீரர் இடம்பெற்றால் ஓப்பனிங் அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் இரு அரைசதம் அடித்துள்ளார். அதனால் சிஎஸ்கே அணிக்கு நல்ல ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்று நினைத்தால் அவரது ஆட்டம் இன்னும் சரியான முறையில் வெளிப்படவில்லை. அதனால் அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்துள்ள ராபின் உத்தப்ப இடம்பெற்றால் நிச்சியமாக நல்ல ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.