சென்னை அணியின் எதிர்காலம் இவர்தான் ; முன்னாள் ஜிம்பாப்வே வீரர் பேட்டி…! யார் அது தெரியுமா ?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோசத்தில் உள்ளனர். இதுவரை 15 ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில். முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , இரண்டாவது இடத்தில் பெங்களூர் அணியும், மூன்றாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது.

நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 220 ரன்கள் அதிரடியாக விளையாடி உள்ளனர். பின்பு இறுதிவரை போராடிய கொல்கத்தா அணி 202 ரன்கள் எடுத்த நிலையில் தோல்வியை சந்தித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளை பற்றி பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதில் நேற்று நடந்த போட்டியை பற்றி முன்னாள் ஜிம்பாப்வே-யின் கிரிக்கெட் வீரரான Pommie Mbangwa சமீபத்தில் அளித்த பேட்டியில் ; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ருதுராஜ் கெய்க்வாட் 64 ரன்களை அதிரடியாக விளையடியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இவர் தான் எதிர்காலம் , இவரது வெற்றி என்பது சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார். இதுவரை ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் வரலாற்றில் 4 அரைசதம் அடித்துள்ளார். முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடாத ருதுராஜ் , நான்காவது போட்டியில் அதிரடியாக 64 ரன்களை அடித்துள்ளார்.