இந்திய இப்பொழுது இரண்டாம் கொரோனா வைரஸ் அலையை யாரும் எதிர்பார்காத, வகையில் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை உதவி செய்ய வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் , அவரால் முடிந்த உதவியை செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். இதுவரை ஐபிஎல் 2021, தொடரில் 25 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதில் மக்கள் பலர் பாதிக்க பட்டு வருகின்றனர். இந்தியாவில் மீண்டும் இரண்டாவது அலை அடித்துள்ளது கொரோனா. அதனால் 3.8 லட்சம் பேர் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் இந்தியாவுக்கு உதவ பல நாடுகள் முன் வந்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் கொரோனா இருப்பதாக அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால் இப்பொழுது அவர் உடல்நிலை சீராக உள்ளது என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. இப்பொழுது இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் பல மக்கள் உயிர் இழந்துள்ளனர்.
அதனால் பல நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்கள் போன்ற நிறைய பேர் அவரவர் தகுதிக்கு ஏற்ப அவர்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். அதன் வகையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், ஒரு கோடி ரூபாய் உதவியாக கொடுத்துள்ளார். அதனை வைத்து ஆக்சிஜன் சம்மந்தப்பட்ட பொருட்கள் வாங்க உதவியாக இருக்கும்.
சச்சின் டெண்டுலரின் செயலால், ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். சச்சின் டெண்டுலர் செய்த செயலை உலக கிரிக்கெட் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். இவரை போல சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வேக பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இந்திய நாடு படும் கஷ்டத்தை பார்த்து 35லட்சம் வழங்கியுள்ளார்.
இன்று ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்திய கொரோனா வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்த 7.5 கோடி ரூபாய் நிதியுதவி கொடுத்துள்ளனர். அதனால் மக்கள் ஆகிய நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளியில் சென்றால் சமூக இடைவெளி மற்றும் அடிக்கடி கை கழுவுதல் நிச்சியமாக செய்ய வேண்டும்.