இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிகள் வருகின்ற 26ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. சமீபத்தில் தான் டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதனால் டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் அனைவரும் இப்பொழுது தென்னாபிரிக்காவுக்கு சென்று பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.


போட்டிகள் ஆரம்பிக்க உள்ள நிலையில் முன்னாள் வீரர்கள் அனைவரும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் , கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஒரு வீரரை பற்றி அவரது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதில் கூறுகையில் ; கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தான் அறிமுகம் ஆனவர் முகமது சிராஜ். அதில் அவர் முதல் போட்டியில் விளையாடியது போலவே தெரியவில்லை. அதிக அனுபவம் உள்ள வீரர் போல பவுலிங் செய்துள்ளார். எப்பொழுது அவர் போட்டியில் விளையாடினாலும் ஏதாவது புதிய யுக்திகளை வெளிப்படுத்துவார்.


அதுமட்டுமின்றி அவர் எப்பொழுதும் பவுலிங் செய்தாலும், முதல் ஓவர் பந்து வீசுகிறாரா ?? 90வது ஒவர் பந்து வீசுகிறாரா என்பதே தெரியாது என்று முகமது சிராஜ் ஐ புகழ்ந்து பேசியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் முகமது சிராஜ் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் ப்ளேயிங் 11ல் இடம்பெருவாரா ??
இதுவரை இந்திய அணியில் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார். ஆனால் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனது கடந்த ஆண்டு இறுதியில் தான். இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இறுதியாக நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முகமது சிராஜ் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இப்பொழுதெல்லாம் முகமது சிராஜ் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் ப்ளேயிங் 11ல் இடம்பெற்று வருகிறார்.


தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் ;
விராட்கோலி, கே.எல்.ராகுல், முகமது சிராஜ், ஷர்டுல் தாகூர், பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், சஹா, ரிஷாப் பண்ட், விஹாரி, ஷ்ரேயாஸ் ஐயர்,ரஹானே, புஜரா, மயங்க் அகர்வால் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.