தோனியிடம் இதை பற்றி சாம் கரண் பேசியே ஆகா வேண்டும் ; ஜோஸ் பட்லர் அதிரடி கருது…! என்ன தெரியுமா..?

0

நேற்று நடந்து முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 329 ரன்களை எடுத்து. அதில் ரோஹித் சர்மா 37 ரன்கள், தவான் 67 ரன்கள், விராட் கோலி 7 ரன்கள், ரிஷாப் பண்ட் 78 ரன்கள், கே.எல்.ராகுல் 7 ரன்கள், ஹார்டிக் பாண்டிய 64 ரன்கள்,மற்றும் குர்னல் பாண்டிய 25 ரன்களை எடுத்துள்ளார்கள்.


330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் ஏதும் அமையவில்லை. ஏனென்றால் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் 14 ரன்களிலும் , பரிஸ்டோவ் 1 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் பேட்டிங் செய்த பென் ஸ்டோக்ஸ் 35 ரன்கள், மலன் 50 ரன்கள், ஜோஸ் பட்லர் 15 ரன்கள் துன்ற நிலையில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் இங்கிலாந்து அணிக்கு நல்ல பார்ட்னெர்ஷிப் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

8வது இடத்தில் பேட்டிங் செய்த சாம் கரண் யாரும் எதிர்க்காத அளவுக்கு அபாரமான ஆட்டத்தை விளையாடியுள்ளார். இறுதி வரை போராடிய சாம் கரண் ஆட்டம் இழக்காமல் 95 ரன்களை எடுத்துள்ளார். அவருக்கு நல்ல ஒரு பார்ட்னெர்ஷிப் கிடைத்திருந்தால் நிச்சியமாக இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்று இருக்கும்.

இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணி 7 ரன்கள் வித்தியசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்ததால் தொடரை வென்று கோப்பையையும் கைப்பற்றியது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு ஜோஸ் பட்லர் அளித்த பேட்டியில் ; சாம் கரண் மிகவும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இங்கிலாந்து அணிக்காக அவர் அவரது கடமையை செய்துள்ளார். நாங்க தோல்வியடைந்தாலும் , சாம் கரண் அவரது திறமையை நிரூபித்துவிட்டார் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர்.

சாம் கரண் அடித்த 95 ரன்கள் பற்றி நிச்சியமாக தோனியிடம் இதனை பற்றி பேசியே ஆகா வேண்டும். இந்திய அணியில் தோனி இருக்கும்வரை இறுதி நேரத்தில் பல போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளார் தோனி. சாம் காரனுக்கும் அதுதான் இறுதி போட்டியில் நடந்தது. அவரது நிழல் போல பேட்டிங் செய்தார் சாம் கரண் என்று கூறியுள்ளார் ஜோஸ் பட்லர்.

Also Read : தோனி ஐபிஎல் 2021 முடிந்த பிறகு ஓய்வு பெறப் போகிறாரா ?? அதிர்ச்சி தகவல்…!

நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று , தோனி மிகப்பெரிய பினிஷெர் என்று. இருந்தாலும் அவருடன் அணியில் இருந்து அவருடன் பேசிக்கொண்டு இருந்தால் நிச்சியமாக பல விசயங்களை கற்றுக்கொள்ள முடியும். அந்த வாய்ப்பு சாம் காரனுக்கு உள்ளது. ஏனென்றால் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, அந்த அணியில் தான் சாம் கரண் உள்ளார் என்று கூறியுள்ளார் ஜோஸ் பட்லர்.

தோல்விக்கு காரணம், எங்கள் அணியில் நல்ல பார்டெர்ஷிப் பேட்டிங் எதுவும் அமையவில்லை என்பது தான் உண்மை. ஒருவேளை அமைந்து இருந்தால் நிச்சியமாக வெற்றி கைப்பற்ற பல வாய்ப்புகள் இருந்து இருக்கும் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணி கேப்டன்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here