இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 329 ரன்களை எடுத்துள்ளனர். அதில் ரோஹித் சர்மா 37 ரன்கள், தவான் 67 ரன்கள், விராட் கோலி 7 ரன்கள், ரிஷாப் பண்ட் 78 ரன்கள், கே.எல்.ராகுல் 7 ரன்கள், ஹார்டிக் பாண்டிய 64 ரன்கள் மற்றும் குர்னல் பாண்டிய 25 ரன்களை அடித்துள்ளனர்.
330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் 14 ரன்கள் மற்றும் பரிஸ்டோவ் 1 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதனால் இங்கிலாந்து அணிக்கு நல்ல ஒரு தொடக்க ஆட்டம் அமையவில்லை. அதனால் இங்கிலாந்து அணியால் நல்ல ரணங்களை அடிக்க முடியவில்லை.
அதன்பின்னர் பேட்டிங் செய்த மலன் 50 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 35 ரன்கள், மெயின் அலி 29 ரன்கள், சாம் கரண் 95 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். இருந்தாலும் 8வது இடத்தில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் வீரர் சாம் கரண் இறுதி வரை போராடி 95 ரன்களை எடுத்துள்ளார். இருந்தாலும் இங்கிலாந்து அணி 7 ரன்கள் விதியசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில்; சாம் கரனின் ஆட்டம் மிகவும் சிறப்பானதாக இருந்தது. அதுமட்டுமின்றி சாம் கரண் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அதனால் சாம் காரனுக்கு தோனி அறிவுரை கிடைத்திருக்கும்.
தோனி எப்படி இறுதிவரை அணியை கொண்டு செல்வரோ அதனை நான் சாம் கரணிடம் கண்டேன் என்று கூறியுள்ளார் ஜோஸ் பட்லர். நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று உலக கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் சிறப்பான பினிஷெர் தோனி தான் என்று.
நிச்சியமாக சாம் கரண் அவர் அடித்த 95 ரன்களை பற்றி நிச்சியமாக தோனியிடம் பேச வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஜோஸ் பட்லர். தோனியின் அணியில் இருக்கும்போது நிச்சியமாக பல அனுபவங்களை கற்றுக்கொள்ள முடியும். அந்த வாய்ப்பு சாம் கரனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கிடைத்துள்ளது ; ஜோஸ் பட்லர்