சென்னை அணியில் ஜடேஜாவை போல இவர் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார் ; முன்னாள் வீரர் உறுதி ;

0

ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2022 போட்டிகள் தொடங்கியுள்ளது. இதுவரை மொத்தம் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. நேற்று நடந்த 2வது பேட்டியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். வேறு வழியில்லாமல் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங் கிடைத்தது தான் உண்மை. ஏனென்றால் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அதிரடியாக விளையாடினார் இஷான் கிஷான்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 177 ரன்களை அடித்தது மும்பை. பின்பு 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி அணி. அதில் தொடக்கத்தில் சற்று சோர்வாக விளையாட தொடங்கினாலும் பின்னர் போக போக ரன்களை அடிக்க தொடங்கினர்.

சரியாக 18.2 ஓவர் முடிவில் 176 ரன்களை அடித்த மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி. அதனால் டெல்லி அணி 0.914 என்ற நெட் ரன் ரேட் அடிப்படையில் பபுள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்துக்கு இரண்டு ரன்கள் வேண்டிய நிலை எழுந்தது.

அப்பொழுது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல் – ரவுண்டர் அக்சர் பட்டேலின் அதிரடியான ஆட்டத்தால் தான் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆமாம், 17 பந்தில் 38 ரன்களை அடித்துள்ளார் அக்சர், அதில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி போன்ற விஷயங்கள் அதில் அடங்கும்…!

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்திவ் பட்டேல் கூறுகையில் ; “அக்சர் பட்டேல் பேட்டிங் பார்க்க மிகவும் அட்டகாசமாக தான் இருக்கிறது. அதிலும் இறுதி நேரத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் நிலையை புரிந்து கொண்டு அவர் அடித்த ரன்கள் மிகவும் முக்கியமான ஒன்று.”

“எனக்கு தெரிந்து சென்னை அணியின் எப்படி ரவீந்திர ஜடேஜா இறுதி நேரத்தில் பேட்டிங் செய்து ரன்களை அடிக்கின்றாரோ, அதேபோல தான் அக்சர் பட்டேலும் விளையாடி வருகிறார். ஜடேஜாவுக்கு இருக்கும் அதே திறன் அக்சர் படேலிடம் உள்ளது என்று கூறியுள்ளார் பார்திவ் பட்டேல்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here