அடுத்த மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. அதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள், இலங்கைக்கு ஏதிரான போட்டிகள், ஐபிஎல் 2021 மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது.
அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளது. வருகின்ற ஜூலை மாதம் இந்திய அணியின் ஏ பிரிவை சேர்ந்த வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும், இந்திய அணியின் பி பிரிவை சேர்ந்த வீரர்கள் இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார்.
அதனால் இலங்கைக்கு எதிரான போட்டியில் முக்கியமான வீரரான விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற வீரர்கள் இடம்பெற வாய்ப்புகள் கிடையாது. அதனால் ஒருசில இளம் வீரர்களுக்கு இந்த முறை நிச்சியமாக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதேபோல, இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இலங்கைக்கு அணிக்கு எதிராக விளையாடும் அணியில் தோராயமான கூறியுள்ளார். அதில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வி ஷாவ் இடம்பெறுவார்கள். ஏனென்றால் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இந்த இருவர் தான் அதிரடியாக விளையாடி பல வெற்றிக்கு உதவியாக இருந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த சூரியகுமார் யாதவ். கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
நான்காவதாக இஷான் கிஷான் இடம்பெறலாம், ஏனென்றால் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடியுள்ளார். ஆனால் ஐபிஎல் 2021 மும்பை இந்தியன்ஸ் அணியில் முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டிகளில் 516 ரன்களை விளாசியுள்ளார். அதேபோல விக்கெட் கீப்பர் ஆக இருப்பதில் சரியாக இருக்கும்.
ஐந்தாவதாக மனிஷ் பாண்டே மற்றும் ஆறாவது இடத்தில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவார்கள். ஏழாவதாக இந்திய அணியின் ஆல் -ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டிய இடம்பெறுவார். அதன்பின்னர் பவுலர்கள் புவனேஸ்வர் குமார், தீபக் சாகர், சேட்டன் சக்கரியா, ராகுல் திவேதிய போன்ற வீரர்களை இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர்