காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து வெளியேறிய இந்திய வீரர் ; மாற்று வீரர் இவர் தான் ; தொடரை கைப்பற்றுமா இந்திய ?

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிகள் இன்று இரவு முதல் நடைபெற உள்ளது. இன்று நடைபெற உள்ள முதல் பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளனர்.

ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றிய வெற்றியுடனும், நம்பிக்கையுடனும் விளையாட போகின்றனர். இருப்பினும் டி-20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் எப்படிப்பட்ட அதிரடியான அணி என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தொடரை கைப்பற்றுமா இந்திய அணி ?

இதற்கிடையில் இந்திய அணியில் தொடக்க வீரர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆமாம், ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் தான் கடந்த சில போட்டிகளில் துவக்க வீரர்களாக விளையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி, கே.எல்.ராகுலும் ரோஹித் ஷர்மாவும் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்துள்ளனர்.

ஆனால் கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவரால் உலகக்கோப்பை 2022ல் விளையாட முடியுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆமாம், அதுமட்டுமின்றி இளம் வீரரான இஷான் கிஷான் ஒருசில போட்டிகளில் மட்டுமே அதிரடியாக விளையாடி வருகிறார்.

இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி டி-20 2022 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில் இந்திய அணியும் அதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். இன்று முதல் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து டி-20 போட்டிகளில் கே.எல்.ராகுல் இடம்பெற்றார்.

ஆனால் அவருடைய காயம் இன்னும் சரியாக நிலையில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளார். ஆனால் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டால் சந்தேகம் தான். அதனால் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் தான் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி மோசமான நிலையில் வெளியேறியது.

அதனால் இந்த முறை அனுபவம் வாய்ந்த வீரர்களை வைத்து மட்டுமே தான் இனிவரும் போட்டிகளில் விளையாட போகின்றனர். அதுமட்டுமின்றி, ரிஷாப் பண்ட் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருப்பினும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடும் போது அது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here