ஆசிய கோப்பை 2022 போட்டிகள் நேற்று இரவு முதல் நடைபெற்று வருகிறது. நேற்று நடத்த முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 105 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தனர்.


பின்பு 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான். அதில் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 106 ரன்களை அடித்த நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றினார்கள்.
அதனால் குரூப் பி பிரிவில் 2 புள்ளிகளை பெற்ற நிலையில் முதல் இடத்தில் உள்ளனர். அதனை தொடர்ந்து இன்று இரவு 7:30 மணியளவில் உலக கிரிக்கெட் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் உலகக்கோப்பை 2021 டி-20 லீக் போட்டிகளில் இந்திய அணியை வென்றது பாகிஸ்தான். அதன்பிறகு இப்பொழுது தான் ஆசிய கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோத உள்ளனர். கடந்த 1984 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து இதுவரை மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி உள்ளனர்.


அதில் இந்திய அணி 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 5 போட்டிகளிலும் வெற்றியை கைப்பற்றியுள்ளது, மீதமுள்ள ஒரு போட்டி ட்ராவில் முடிந்துள்ளது. கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால் யார் வெற்றி பெறுவார்கள் என்று பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை பகிர்வது வழக்கம் தான்.
ஆனால் நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ் சொன்ன கருத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பேட்டி கொடுத்த ஸ்காட் கூறுகையில் ; ” பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார். அதனால் இந்திய அணிக்கு இந்த முறை ஆசிய கோப்பையை வெல்ல வாய்ப்புகள் உள்ளது.”
“அதேபோல் மற்ற அணிகளின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன்களை அடிக்க முடியும். இந்தியாவை போலவே மற்ற அணிகளும் சுலபமாக ஆசிய கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார் ஸ்காட் ஸ்டைரிஸ்.” கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் ஷாஹீன்.


அதனால் இந்த முறையும் அதேபோல விக்கெட்டை நிச்சியமாக கைப்பற்றுவார் என்று சொல்ல முடியாது. அதுதான் உண்மை, ஸ்காட் ஸ்டைரிஸ் ஷாஹீன் ஒருவரை பற்றி சிறப்பாக பேசி மற்ற அணிகளை தாழ்த்தி பேசியது போல தான் தெரிகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்..!