இண்டோரில் : நேற்று காலை 9:30மணியளவில் தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மோதி விளையாடிய வருகின்றனர்.


இதற்கு முன்பு நடந்து முடிந்த இரு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி அருமையாக விளையாடி ஆஸ்திரேலியா அணியை வென்று 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.
மூன்றாவது போட்டியின் விவரம் :
டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் பெரிய அளவில் ரன்களை அடிக்காத காரணத்தால் இந்திய அணிக்கு பின்னடைவு தான் ஏற்பட்டது.


அதுமட்டுமின்றி, தொடர்ந்து இந்திய வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்து கொண்டு வந்தனர். வெறும் 33.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய கிரிக்கெட் அணி வெறும் 109 ரன்களை மட்டுமே அடித்தனர்.
பின்பு முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. டிராவிஸ் ஹெட் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும் கவாஜா, லபுஸ்சாக்னே, ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் க்ரீன் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்தனர்.


அதனால் 76.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 197 ரன்களை அடித்தனர். அதனால் 88 ரன்கள் இந்திய அணியை விட முன்னிலையில் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
முதல் நாளில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய அணி மோசமான நிலையில் இருந்தது. அதுவும் வெறும் 109 ரன்களை மட்டுமே அடித்தனர். அதுமட்டுமின்றி, முதல் நாளில் இந்திய அணியின் பவுலிங் பெரிய அளவில் எடுபடவில்லை.


இருப்பினும் ரவீந்திர ஜடேஜா மட்டும் 4 விக்கெட்டை கைப்பற்றினார். ஆனால் இரண்டாவது நாள் (இன்று) உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பவுலிங் விக்கெட்டை தொடர்ந்து கைப்பற்றியது இந்திய.
இப்பொழுது மீண்டும் இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாடி வருகிறது. இதுவரை 4 ஓவர் முடிந்த நிலையில் 13 ரன்களை அடித்துள்ளனர். அதில் ரோஹித் சர்மா 5*, சுப்மன் கில் 4* ரன்களை அடித்துள்ளனர்.
முதல் இரு டெஸ்ட் போட்டியை போலவே மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெல்லுமா ?