தோனி-க்கும் ரவி சாஸ்திரி-க்கும் சண்டையா ??? விளக்கம் கொடுத்த கங்குலி ; நடந்து என்ன ; முழு விவரம் இதோ ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் கடந்த 17ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த முறை இந்தியாவில் நடைபெற வேண்டிய போட்டி கொரோனா காரணமாக இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டிலும், ஓமன் நாட்டிலும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பிசிசிஐ உறுப்பினர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி-யின் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் இப்பொழுது தோனியை ஆலோசகராக நியமனம் செய்துள்ளீர்கள் ..!! இதனால் அனைத்து வீரர்களும் நிச்சியமாக தோனியிடம் தான் அதிக நேரம் பேசுவதாக இருந்தாலும் சரி, பயிற்சி மேற்கொண்டாலும் சரி…! நேரத்தை உபயோகப்படுத்த போகிறார்கள்.

இதனால் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் மகேந்திர சிங் தோனிக்கும் சண்டை வாய்ப்பு உள்ளது இல்லையா ?? என்ற கேள்வி கங்குலி-யிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்குலி, ரவி சாஸ்திரி பயிற்சியாளர், டோனி ஆலோசகர் மற்றும் விராட்கோலி இந்திய அணியின் கேப்டன்.

இவர்கள் மூவருக்கும் அவரவர் வேலைகளை சரியாக பார்க்க தெறியும். நாங்கள் அவர்களிடம் அதனை பற்றி தெளிவாக தான் கூறியுள்ளோம் என்று கூறியுள்ளார் கங்குலி.

தோனியை ஏன் ஆலோசகராக நியமனம் செய்துள்ளீர்கள் ??

கடந்த ஆண்டு 2020ஆம் தீடிரென்று அவரது ஓய்வை அறிவித்து விட்டார். ஆனால் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி அணியை வழி நடத்தி டி-20, ஒருநாள் மற்றும் சாம்பியன்ஷிப் போன்ற அனைத்து ஐசிசி கோப்பைகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார் தோனி.

அவரை எப்படியாவது மீண்டும் இந்திய அணியில் இணைக்க நானும் ஜெய்ஷா ஆகிய இருவரும் நீண்ட நாட்கள் யோசனை செய்து கொண்டு தான் இருதோம். அப்பொழுது தான ஆலோசகர் இடம் காலியாக இருப்பதை தெரிந்து கொண்டு அதற்கு தோனியை எப்படியாவது நியமனம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம்.

ஆனால் அந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருந்த காரணத்தால், அவரிடம் சரியாக பேசும் வாய்ப்பு அமையவில்லை. பின்னர்அவரிடம் கேட்டபோது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். இந்திய அணியில் மறக்க முடியாத வீரரின் அனுபவம் நிச்சியமாக இந்திய அணிக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார் கங்குலி.