HomeTrending Newsஇனிமேல் டி-20 போட்டிக்கான இந்திய அணியில் இவரது பெயர் இருக்காது ; ரசிகர்கள் அதிர்ச்சி ;

இனிமேல் டி-20 போட்டிக்கான இந்திய அணியில் இவரது பெயர் இருக்காது ; ரசிகர்கள் அதிர்ச்சி ;

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் :

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில் டி-20 போட்டியிலும் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர்.

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் ;

இந்த ஆண்டு இறுதியில் உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அதற்க்கான அணியை தேர்வு செய்ய அனைத்து அணிகளை போலவே இந்திய கிரிக்கெட் அணியும் அதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

வேகப்பந்து வீச்சாளர் :

கடந்த 213ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனவர் முகமத் ஷமி. இதுவரை இந்தியா அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகமாக விளையாடிய ஷமி டி-20 போட்டிகளில் மட்டும் குறைவான அளவில் மட்டுமே விளையாடி வந்துள்ளார்.

இதுவரை 60 டெஸ்ட் , 79 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார் ஷமி. டி-20 சர்வதேச போட்டியில் கடந்த 9 ஆண்டுகளில் வெறும் 17 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அதிலும் 18 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார் ஷமி. அதனால் அவர் ஆசிய, ஐசிசி டி-20 உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் இடம்பெறுவாரா ? என்ற பல கேள்விகள் எழுந்தன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சில தகவல் வெளியாகியுள்ளது. அதில் இனிவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே முகமத் ஷமி பெயர் இடம்பெறும். டி-20 போட்டியில் அவரது பெயர் இடம்பெற வாய்ப்பு மிகவும் குறைவு தான் என்று தேர்வாளர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு வீரர் அனைத்து போட்டிகளிலும் (ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட்) விளையாடுவதை விட ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அவருக்கான இடம் எப்பொழுதும் இந்திய அணியில் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேபோல தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஷமி விளையாட உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img