இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி 14வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். உலகத்திலேயே மிகவும் சிறந்த போட்டி என்றால் அது ஐபிஎல் போட்டி தான் என்று கூறும் அளவுக்கு பிரபலமாகி உள்ளது.
எல்ல அணி வீரர்களும் அவரவர் அணியில் இணைந்து தீவிரமான பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். அதனால் இந்த ஆண்டு நிச்சியமாக பல விறுவிறுப்பான போட்டிகள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, எல்ல அணிகளும், அவரவர் வீரர்கள் செய்யும் பயிற்சி புகைப்படம் அல்லது பேட்டி அளிக்கும் விடீயோக்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ஐபிஎல் வீரர்கள் பற்றியும் ஐபிஎல் போட்டியில் யார் வெற்றி பெறுவார் , யார் அதிக ரன்கள் எடுப்பர் என்று பல கருத்துக்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்துக்களை கூறி வருகின்றனர். அதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அணி கும்ப்ளே சமீபத்தில் அளித்த பேட்டி ; எங்கள் அணியின் பொல்லார்ட் இவர்தான்.
மும்பை அணியின் வீரர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரரான பொல்லார்ட் ஒரு அதிரடியான வீரர். அவரது ஆட்டம் எப்பொழுது அதிரடியாக தான் இருக்கும். பஞ்சாப் அணியிலும் ஒரு பொல்லார்ட் இருக்கிறார் என்று கூறியுள்ளார் அணில் கும்ப்ளே.
நான் மும்பை அணியின் பயிற்சியாளராக இருக்கும்போது நெட் பயிற்சி செய்யும் போது அவர் மிகவும் அதிரடியாக விளையாடுவார். நான் பந்தை என்னிடம் அடிக்க வேண்டாம் என்று பொல்லார்ட்-யிடம் சொல்லுவேன்.
அதே போல , தமிழக வீரரான ஷாருக் கான் நெட் பயிற்சி செய்யும்போது பொல்லார்ட் போலவே இவரது ஆட்டமும் அதிரடியாக தான் உள்ளது. அதனால் நான் இவருக்கு ஒருபோதும் பந்து வீச மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். நிச்சியமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார் அணில் கும்ப்ளே.
ஐபிஎல் 2021 ஏலத்தில் ஷாருக் கானை 20 லட்சத்தில் இருந்து ஏழாம் ஆரம்பித்தனர். அதன்பின்னர் இறுதியாக 5.25கோடி விலைகொடுத்து வாங்கியது கிங்ஸ் XI பஞ்சாப் அணி. பஞ்சாப் அணிக்கு முதல் போட்டி வருகின்ற 12ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.