ஐபிஎல் 2021, போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர். நேற்று நடந்த 17வது ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் வெறும் 131 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதிலும் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 63 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களை விளாசியுள்ளார்.
பின்பு பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. 17.4 ஓவரில் 132 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. அதனால் புள்ளிப்பட்டியளில் 4வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 5வது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் உள்ளது.
இந்த போட்டியின் போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சேர்ந்த ஷாருகான் நிச்சியமாக சதம் அடிக்கும் அதிக சாத்தியம் உண்டு. அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சியமாக அதிக ரன்களை அடிப்பார் என்று சேவாக் கருத்து கூறியுள்ளார்.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய 90 ரன்களை எடுத்துள்ளனர். அதில் அதிகபட்சமாக 47 ரன்களை எடுத்துள்ளார். சில போட்டியில் பஞ்சாப் அணியின் முக்கியமான வீரர்கள் ஆட்டம் இழந்த போது, ஷாருகான் சரியான நேரத்தில் அதிரடியாக விளையடியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியளில் 7வது இடத்தில் இருந்து, 5வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் முன்னேறுமா ?