அடுத்த ஹார்டிக் பாண்டிய இவர் தான் …! ஸ்காட் ஸ்டைரிஸ் ; ஒருவேளை இவர் சொன்னது சரிதானோ..!

இந்திய கிரிக்கெட் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் – ரவுண்டர் ஹார்டிக் பாண்டிய போல இவருக்கு ஆசைப்படலாம்… !! முன்னாள் நியூஸிலாந்து அணியின் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021, கோலகமாக சிறப்பான முறையில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இதுவரை, ஐபிஎல் 2021 தொடரில் 25 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

புள்ளிபட்டியலில் 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் நெட் ரன்-ரேட் +1.475 பெற்று முதல் இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2வது இடத்தில் 10 புள்ளிகளுடன் +0.466 நெட் ரன்-ரெட் பெற்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், 3வது இடத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் 10 புள்ளிகளுடன் +0.089 ரன்-ரேட் பெற்றுள்ளது.

4வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 5வது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 6வது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், 7வது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 8வது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் உள்ளது.

நியூஸிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றி, இவர் ஹார்டிக் பாண்டிய போல வரலாம் என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அறிமுகம் ஆகியவர் ஷாருகான்.

இதுவரை அவர் விளையாடிய ஐந்து போட்டிகளில் 103 ரன்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக 47 ரன்களை விளாசியுள்ளார், அதில் 135.52 ஸ்ட்ரைக் ரேட் கொண்டு விளையாடி உள்ளார். அதுவும் பஞ்சாப் கிங்ஸ் அணி இக்கட்டான சூழ்நிலையில் அதிக ரன்களை எடுத்து கொடுத்துள்ளார்.

அவருக்கு இப்பொழுதே அழுத்தம் கொடுக்க கூடாது. அவரை அவர் போக்கில் விளையாட வேண்டும். அவர் நிச்சியமாக இன்னும் 4 அல்லது 5 சீசன் ஐபிஎல் போட்டிகள் ஆகும். அவர் நல்ல பினிஷெர் என்று. அதனால் அவருக்கு அந்த நேரத்தை கொடுத்து தான் ஆக வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்ட் போல இல்லை என்றாலும், அவர் நிச்சியமாக ஹார்டிக் பாண்டிய போல வளர ஆசைப்படுவார். நான் தமிழ் நாடு ப்ரீமியம் லீக் போட்டியில் அவர் பார்க்கும்போது, அவர் அதிரடி வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அதனால் ஷாருகான் , மற்ற வீரர்களுடன் சகஜமாக விளையாடட்டும். ஐபிஎல் போட்டியில் இந்திய வீரர்களுடன் இணைந்து பல அனுபவத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர், ஸ்காட் ஸ்டைரிஸ்.