சுரேஷ் ரெய்னா சாதனையை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிய தவான்…!! முழு விவரம் இதோ…!!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்து முன்னேறிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான்… அப்படி என்ன சாதனை… தெரியுமா ? முழு விவரம் இதோ…!

நேற்று நடந்த போட்டியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்க ஆட்டம் சரியாக அமைந்தாலும் , அதன் பின்னர் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை.

அதனால் நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்த நிலையில் 154 ரன்களை எடுத்துள்ளார். அதில் நிதிஷ் ரானா 15 ரன்கள், சுமன் கில் 43 ரன்கள், ராகுல் த்ரிபதி 19 ரன்கள், மோர்கன் 0 ரன்கள் ,நரேன் 0 ரன்கள், ஆன்ட்ரே ரசல் 45 ரன்கள், தினேஷ் கார்த்திக் 14 ரன்கள், மற்றும் பேட் கம்மின்ஸ் 11 ரன்களை விளாசியுள்ளார். பின்பு 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேப்பிடல்ஸ்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி 16.3 ஓவர் முடிவில் வெற்றியை கைப்பற்றியது. அதில் ப்ரித்வி ஷாவ் 82 ரன்கள், தவான் 46 ரன்கள், ரிஷாப் பண்ட் 16 ரன்கள் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் 6 ரன்களை விளாசியுள்ளார். அதிரடியாக விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 16.3 ஓவரில் வெற்றியை கைப்பற்றியது.

இதுவரை சுரேஷ் ரெய்னா 194 ஐபிஎல் போட்டிகள் விளையாடி 5508 ரன்களை எடுத்து அதிக ரன்கள் அடித்த புள்ளிப்பட்டியளில் இரண்டாவது இடத்தில் இருந்த ரெய்னாவை பின்னுக்கு தள்ளிய தவான். நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தவான் 46 ரன்களை விளாசியுள்ளார். அதில் 2 சதம் மற்றும் 43 அரைசதம் அதில் அடங்கும்.

ஐபிஎல் ஆரம்ப காலத்தில் இருந்து இப்பொழுது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். ஆனால் தவான் அவ்வாறு இல்லை , இதுவரை மும்பை இந்தியன்ஸ், டெக்கான் போன்ற அணியில் விளையாடி என்பது குறிப்பிடத்தக்கது. அதே புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார். இதுவரை 190 போட்டிகளில் விளையாடி 6041 ரன்களை விளாசியுள்ளார். அதில் 5 சதம் மற்றும் 40 அரைசதம் அடித்துள்ளார் விராட் கோலி.