இலங்கைக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணியில் இவர் இல்லையா ; வெற்றிக்கு வாய்ப்பு இருக்குமா ?

வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இந்த போட்டி இந்திய மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரு அணிகள் மோத உள்ளன.

அதுமட்டுமின்றி இந்த போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்அம்ப்டன் மைதானத்திலோ நடைபெற உள்ளது. அதனால் இப்பொழுதே இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பு முறையான பின்பற்றி தனிப்படுகொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஜூன் தொடக்கத்திலேயே இங்கிலாந்துக்கு நாட்டுக்கு இந்திய வீரர்கள் போக போவதாக தகவல் வெளியானது.

ஏனென்றால் இங்கிலாந்து நாட்டுக்கு சென்ற பிறகு 7 முதல் 10நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும், அதன்பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வீரர்கள் பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு என்லாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கிடையே பிசிசிஐ தீடிரென்று இலங்கை சுற்றுப்பயணத்தை உறுதி செய்தது. ஆனால் கொரோனா தோற்று காரணமாக இந்திய B அணி இதில் விளையாடும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

அதில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் தோள்பட்டையில் பலமாக அடிபட்டு விட்டது. அதனால் மீதமுள்ள போட்டிகளிலும் விளையாட முடியாமல் போய்விட்டது.

அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் குறைந்தது 3 மாதங்கள் ஆவது ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளனர். அதனால் அவரால் இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் விளையாட முடியாது என்று பிசிசிஐ கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனால் இந்த ஆண்டு இறுதியில் நடக்க போகின்ற டி-20 உலகக்கோப்பை போட்டியில் அவர் இந்திய அணியில் இருப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.