HomeTrending Newsஇதை பற்றி என்னிடம் கேக்காதீங்க..! எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை ; ஹர்டிக் பாண்டிய...

இதை பற்றி என்னிடம் கேக்காதீங்க..! எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை ; ஹர்டிக் பாண்டிய பேட்டி ;

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று சவுத்ஆம்டன் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணி 20 ஓவர் முடிவில் 198 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக ஹர்டிக் பாண்டிய அரைசதம் அடித்துள்ளார். பின்பு 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி…….!

ஆனால் தொடக்க வீரர் மற்றும் கேப்டனான ஜோஸ் பட்லர் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். அதனால் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 148 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்திய அணியில் முக்கியமான வீரராக இருக்கும் ஹர்டிக் பாண்டிய சிறப்பாக விளையாட வந்தார். ஆனால் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஹர்டிக் பாண்டியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பின்னர் அவரால் சரியாக பவுலிங் செய்ய முடியவில்லை. தொடர்ந்து போட்டிகளில் இடம்பெற்றாலும், விளையாட்டு பெரிய அளவில் இல்லாமல் போனது. ஆனால் நீண்ட நாட்கள் கழித்து ஐபிஎல் 2022யில் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுத்தார். அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளார்.

ஆமாம் பேட்டிங் செய்து 51 ரன்களையும் , பவுலிங் செய்து 4 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் ஹர்டிக் பாண்டிய. போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்டிக் பாண்டியவிடம் பல கேள்விகள் கேட்ப்பட்டது. அதில் அடுத்த போட்டியில் (இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20) முன்னணி வீரர்கள் பலர் இடம்பெற உள்ளனர்.

அதில் யார் யாருக்கு பதிலாக அணியில் இடம்பெற போகிறார்கள் என்று ஹர்டிக் பாண்டியவிடம் கேள்விகள் எழுந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்; ” சார், நிர்வாகம் என்ன நினைக்கின்றனர் என்பதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இப்பொழுது எப்பொழுதும் ஒரு ஆல் – ரவுண்டராக தான் விளையாடி வருகிறேன்.”

“அதனால் நிர்வாகம் என்ன யோசிக்கும் என்பதை பற்றி நான் யோசித்தது இல்லை. நான் எப்பொழுதும் பேட்டிங் மற்றும் பவுலிங் சமமாக தான் விளையாடி வருகிறேன். நான் அடித்த 50 ரன்கள் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் அதற்கு முன்பு சில விக்கெட்டை இழந்துவிட்டோம்.”

“இருப்பினும் நாங்கள் நிதானமாக விளையாடி நல்ல ரன்களை அடித்துள்ளோம். ஆனால் பவுலிங் செய்த வீரர்களுக்கு தான் முக்கியான பாராட்டுகள் சேரும். ஏனென்றால் சிறப்பாக பவுலிங் செய்து இங்கிலாந்து வீரர்களை திணறடித்துள்ளனர்.அதனால் தான் இந்திய அணி வென்றுள்ளது என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.”

இரண்டாவது போட்டியில் எந்த வீரர்களுக்கு பதிலாக விராட்கோலி, பும்ரா, ரிஷாப் பண்ட், பும்ரா போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற போகிறார்கள் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img