ஐபிஎல் 2021, கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்தது. ஆனால் போட்டிகள் நடந்து கொண்டு இருந்த நேரத்தில் சில வீரர்களுக்கு கொரோனா தோற்று உறுதியானது. அதனால் ஐபிஎல் 2021 போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது பிசிசிஐ.
ஆனால் இப்பொழுது பிசிசிஐ, சில முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. அதில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் தான் நடைபெறும். அதுவும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று கூறியுள்ளது பிசிசிஐ. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிக்காக எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
ஐபிஎல் 2021, தற்காலிகமாக நிறுத்தி வாய்த்த பின்னர், அனைத்து வீரர்களையும் அவரவர் நாட்டுக்கு வழி அனுப்பிவைத்தது பிசிசிஐ. அதன்பின்னர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் , இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகள் என்று பல போட்டிகள் நடைபெற உள்ளது.
அதனால் ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் நடைபெறுமா இல்லை என்றே தெரியாத நிலையில் இருந்தது. ஆனால் இப்பொழுது மீண்டும் உறுதி செய்தது பிசிசிஐ, வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி மீதமுள்ள போட்டிகள் நடைபெறும் என்று உறுதியாக கூறியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டது. அதில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் யாரும் விளையாட வரமாட்டார்கள். ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது.
அதனால் இங்கிலாந்து அணி வீரர்கள் யாரும் ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகளில் விளையாடமாட்டார் என்று கூறியுள்ளனர். அதனால் ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார். அதுமட்டுமின்றி, சமீபத்தில் பிசிசிஐ, அளித்த பேட்டியில் நாங்கள் அனைத்து வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற அதிகம் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.
ஆனால் இன்னும் எதுவும் சரியாக உறுதியாக நிலையில் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்..! ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிக்காக யாரெல்லாம் காத்துகொண்டு இருக்கீங்க??