தோனி இதை சொன்ன பிறகு மேக்ஸ்வெல் விக்கெட்டை கைப்பற்றினேன்..! ஜடேஜாவின் உருக்கமான பேச்சு…!
நேற்று நடந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இந்த போட்டி நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 191 ரன்களை அடித்துள்ளனர். அதிலும் இறுதி ஓவரில் 37 ரன்களை விளாசியுள்ளார், ஜடேஜா.
சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 33 ரன்கள், டுப்ளஸிஸ் 50 ரன்கள், சுரேஷ் ரெய்னா 24 ரன்கள், ராயுடு 14 ரன்கள், ஜடேஜா 62 ரன்கள் மற்றும் தோனி 2 ரன்களை விளாசியுள்ளனர். பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தோல்விதான் மிஞ்சியது.
பெங்களூர் அணியின் பேட்டிங் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடினாலும், அதனபின்னர் பேட்டிங் செய்த மேக்ஸ்வெல் , டிவில்லியர்ஸ் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் தோல்வியை சந்தித்தது பெங்களூர் அணி.
69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது சிஎஸ்கே. தோல்வியை சந்தித்த அணி 7வது இடத்திலும் உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
சிஎஸ்கே அணி பவுலிங் செய்யும்போது 9வது ஓவரில் பந்து வீசிய ஜடேஜாவிடம் கிளென் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை கைப்பற்றும் முன் சில வார்த்தையை ஜடேஜாவிடம் ஹிந்தியில் கூறியுள்ளார். அதில் ” அவர் பவுண்டரி ரன்கள் அடித்தால் பரவாயில்லை , நீ ஸ்டம்ப் பார்த்து பந்து வீசு என்று கூறியுள்ளார் தோனி.
தோனி சொன்ன அடுத்த பந்தில் மேக்ஸ்வெல் விக்கெட்டை கைப்பற்றினார். இப்பொழுது இதன் வீடியோ வைரலாக பரவி வருகிறது. வீடியோ ;