இந்த முடிவை தோனி எடுக்கவில்லை ; தோனியை பற்றி தவறான கருத்துக்கள் பரவி வருகிறது ; விக்ரம் ரத்தோர் பேட்டி

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியால் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியுமா ?? என்பதை சந்தேகம் தான்..! ஏனென்றால் இதுவரை இரு போட்டிகளில் விளையாடி அதிலும் தோல்வியை பெற்றுள்ளது..!

இந்திய அணியின் தோல்விக்கு யார் காரணம் ? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, தோல்விக்கு காரணம் விராட்கோலி தான் என்று பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆமாம் தோல்விக்கு என்ன காரணம் என்றே தெரியாத நிலையில் தான் இந்திய அணி உள்ளது.

ஏனென்றால் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிராக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது பாகிஸ்தான். பின்னர், சமீபத்தில் நடந்த போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொண்டது. அதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது நியூஸிலாந்து அணி.

முதல் போட்டியில் 150+ ரன்களை அடித்தும் இந்திய அணியால் எதிர் அணியின் விக்கெட்டை கைப்பற்ற முடியவில்லை. அதுமட்டுமின்றி, நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெறும் 110 ரன்களை மட்டுமே அடித்தனர். இதில் பேட்டிங் யாரும் சரியாக செய்யவில்லை…!

பின்னர்,இப்பொழுது தோனியை பற்றி சில தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் என்றால் அது கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கினார்.

அதில் இஷான் கிஷான் இடம்பெற்றும் இந்திய அணிக்கு ஒரு பயனும் இல்லை. அதுமட்டுமின்றி, ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷனை ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக விளையாட வைத்தது தோனி தான் என்ற கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தியா அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் அளித்த பேட்டியில்; தோனியை பற்றி சில தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. ரோஹித் சர்மா தான் எனக்கு பதிலாக இஷான் கிஷான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க சொன்னார்…! என்று கூறியுள்ளார் விக்ரம்…!