கேப்டன்ஷீ பற்றி பேசிய தல மகேந்திர சிங் தோனி ; அப்போவே சரியாகத்தான் சொல்லிருக்காரு ; அப்படி என்ன தோனி சொன்னார் ? முழு விவரம் உள்ளே ;

0

இந்திய அணியின் கேப்டன் பற்றிய சர்ச்சை இப்பொழுது தான் ஒரு முடிவுக்கு வந்துள்ளது என்று சொல்லலாம். ஆமாம், சரியாக கடந்த ஆண்டு இறுதி நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கு ஆரம்பித்தது இந்த பிரச்சனை. அதில் விராட்கோலியே நான் டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்தார்.

பின்னர் பிசிசிஐ மற்றும் இந்திய அணியின் தேர்வாளர்கள் கூறுகையில் ; இந்திய அணியில் ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன், டி-20 போட்டிக்கு இன்னொரு கேப்டன் என்ற அடிப்படையில் இருக்க கூடாது. அதனால் ஒருநா போட்டிக்கான கேப்டன் பதவியில் விராட்கோலியை வெளியேற்றி ரோஹித் ஷர்மாவை நியமனம் செய்தனர்.

பின்னர் வெறும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கேப்டனாக விளையாடி வந்துள்ளார் விராட்கோலி. ஆனால் அதுவும் நீண்ட நாட்கள் நீட்டிக்க வில்லை. ஆமாம் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 1 – 2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த காரணத்தால் தொடரை கைப்பற்றாமல் போனது.

அதனை எப்படி கையாளுவது என்று தெரியாமல், தீடிரென்று நான் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போகிறேன் என்று கூறினார் விராட்கோலி. அதனை தொடர்ந்து இப்பொழுது யார் அடுத்த கேப்டன் என்று பிசிசிஐ முடிவு செய்யாமல் தவித்து வருகிறது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் சமீபத்தில் அளித்த பேட்டியில்; இப்பொழுது இந்திய அணியில் நடக்கும் கேப்டன் பற்றிய பிரச்சனைகளை பார்த்தால் எனக்கு தோனி சொன்ன விஷயம் தான் நியாபகத்திற்கு வருகிறது.

ஆமாம்..! தோனி அன்றே சொன்னார், இந்திய ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் நாடு அதில் கேப்டன்களை பிரிப்பது கடினமான ஒன்று. அதாவது டெஸ்ட் போட்டிக்கு ஒரு கேப்டன், ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன் என்று வைப்பது கடினமான வேலை என்று கூறியுள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறினார்.

விராட்கோலியை பற்றி பேசிய தினேஷ் கார்த்திக் ; இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார் விராட்கோலி, அதுவும் குறிப்பாக டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை இந்த அளவிற்கு கொண்டு வந்தது விராட்கோலி தான். நான் அவர் தலைமையிலான இந்திய அணியில் விளையாடியுள்ளேன்.

ஒவ்வொரு போட்டியிலும் அவர் எந்த அளவுக்கு விளையாடுவார் என்பது எனக்கு நன்கு தெரியும். அவருடன் என்ன இருக்கிறதோ அதனை எப்பொழுதும் விளையாடும் போது கொடுத்துவிடுவார். இந்திய டெஸ்ட் போட்டிக்கான கேப்டன்களில் சிறந்த கேப்டன் விராட்கோலி தான் என்று பெருமையுடன் பேசியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here