HomeTrending Newsபாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் கவலை இல்லை ; இவரது Form மீண்டும் திரும்பிவிட்டது ;...

பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் கவலை இல்லை ; இவரது Form மீண்டும் திரும்பிவிட்டது ; அதனால் கவலையில்லை ; ரோஹித் சர்மா பேட்டி

சூப்பர் 4 லீக் போட்டி 2: நேற்று இரவு 7:30 மணியளவில் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் , ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின.

டாஸ் மற்றும் முதல் பேட்டிங் :

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இந்திய அணி முதலில் ரன்களை டார்கெட் வைக்க முடிவு செய்து களமிறங்கினார்கள். தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் பவர் ப்ளேவில் ரன்களை அடித்து தொம்சம் செய்தனர்.

ஆனால் இவர்கள் இருவரும் ஆட்டம் இழந்த பிறகு ரன்களை அடித்த வேகம் அப்படியே குறைந்தது. இருப்பினும் விராட்கோலி விளையாடிய அதிரடியான அரைசதம் அடித்தார். ஆனால் அதற்கு பிறகு எந்த பேட்ஸ்மேன்களும் சரியாக விளையாட காரணத்தால் ரன்களை குறைந்தது. முதல் 10 ஓவரில் 10 ரன்கள் என்ற கணக்கில் அடித்து கொண்டு வந்தது இந்திய.

ஆனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 181 ரன்களை அடித்தனர். அதில் கே.எல்.ராகுல் 28, ரோஹித் சர்மா 28, விராட்கோலி 60, சூரியகுமார் யாதவ் 13, ரிஷாப் பண்ட் 14, தீபக் ஹூடா 16 ரன்களை அடித்துள்ளனர்.

இலக்கு மற்றும் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்:

182ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. தொடக்க வீரரான பாபர் அசாம் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தார். இருப்பினும் ரிஸ்வானின் அதிரடியான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு ரன்கள் குவிந்தன.

இறுதி ஓவர் வரை விளையாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 182 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி. அதில் ரிஸ்வான் 71, பாபர் அசாம் 14, ஜமான் 15, நவாஸ் 42, ஆசிப் அலி 16 ரன்களை அடித்துள்ளனர். அதனால் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் அணியும், மூன்றாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியும் உள்ளது.

ரோஹித் சர்மா பேட்டி:

“இந்த போட்டி மிகப்பெரிய அளவில் அழுத்தமாக இருந்தது என்று நன்கு தெரியும். இது அனைத்து போட்டிகளில் நடக்க கூடிய ஒன்று தான். ஆனால் எங்கள் அணி (இந்திய) பொறுமையாக தான் விளையாடினோம், ரிஸ்வான் மற்றும் நவாஸ் பார்ட்னெர்ஷிப் செய்து கொண்டு இருந்த நேரத்திலும் கூட. அந்த விக்கெட் மட்டும் தான் நீண்ட நேரமாக பேட்டிங் செய்து கொண்டு இருந்தனர்.”

“அவங்க பேட்டிங் பார்த்து ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஏனென்றால் மற்ற அணிகளுடன் அவர்கள் விளையாடுவதை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். அதுமட்டுமின்றி எங்களுக்கு ஒன்று புரிந்தது முதல் பேட்டிங்கை விட இரண்டாவது பேட்டிங் செய்தவர்களுக்கு பிட்ச் கொஞ்சம் நன்றாக இருந்தது.”

“நிச்சியமாக இது எங்களுக்கு நல்ல பாடம் தான். 181 ரன்களை அடித்தது சரியாக தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு மாற்றாக மாறியது. பாகிஸ்தான் அணிக்கு தான் பெருமை சேரும். ஏனென்றால் எங்களை விட பாகிஸ்தான் அணி தான் சிறப்பாக விளையாடினார்கள். இருப்பினும் விராட்கோலி போரம் மிகவும் முக்கியமான ஒன்று.”

“மற்றவர்கள் ஆட்டம் இழந்து கொண்டு இருக்கும்போது விராட்கோலியை போல யாராவது ஒருவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும். அதேபோல தான் விராட்கோலி பேட்டிங் செய்து கொண்டு வந்தார். ஹர்டிக் பாண்டிய மற்றும் ரிஷாப் பண்ட் விக்கட்டை இழந்தது தான் எனக்கு சரியாக படவில்லை. போட்டி என்று வந்தால் அது எப்பொழுதும் வெற்றி மட்டும் தான் இருக்கும் என்று நினைக்க கூடாது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img