இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரர்கள் பலருக்கு வாய்ப்பே கிடைப்பது இல்லை. அதற்கு முக்கியமான காரணம் சரியாக விளையாடாதது தான்.

மூன்றாவது ஒருநாள் போட்டியின் விவரம் :
நேற்று மதியம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணிக்கு சரியான பேட்டிங் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த தென்னாபிரிக்கா அணியால் ரன்களை அடிக்க முடியாமல் போனது.
27.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் வெறும் 99 ரன்களை மட்டுமே அடித்தனர் தென்னாபிரிக்கா வீரர்கள். அதில் அதிகபட்சமாக மலன் 15, க்ளாஸென் 34, மார்கோ ஜென்சென் 14 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 100 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய.

தென்னாபிரிக்கா அணியை போலவே தொடக்கத்தில் மூன்று விக்கெட்டை தொடர்ந்து இழந்தனர். ஆனால் 19.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 105 ரன்களை அடித்தனர். அதில் ஷிகர் தவான் 8, சுப்மன் கில் 49, இஷான் கிஷான் 10, ஸ்ரேயாஸ் ஐயர் 28*, சஞ்சு சாம்சன் 2* ரன்களை அடித்துள்ளனர்.
அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியை வென்றுள்ளது இந்திய. அதுமட்டுமின்றி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய.
கூடிய விரைவில் வாய்ப்பை இழக்க போகும் வீரர் :
கடந்த சில ஆண்டுகளாவே இந்திய அணியின் டி-20 போட்டிக்கான வாய்ப்பை தொடர்ந்து இழந்து வருகிறார் தொடக்க வீரரான ஷிகர் தவான். இப்பொழுது ரோஹித் சர்மா இல்லாத நேரங்களில் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாகவும் விளையாடி வருகிறார் ஷிகர். ஆனால் இப்பொழுதெல்லாம் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தும் சரியாக விளையாடாமல் திணறி கொண்டு வருகிறார்.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவான் பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை என்பது தான் உண்மை. தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் ஷிகர் தவான் 4,13,8 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.
இதே போல இனிவரும் போட்டிகளிலும் விளையாடினால் நிச்சியமாக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைப்பது சிரமமாக மாறிவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..! இந்திய அணியிக்கு ஷிகர் தவான் தேவையான வீரரா ? இல்லையா ? உங்கள் கருத்து என்ன ? மறக்காமல் பதிவு செய்யுங்கள் ?
0 Comments