இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இரு போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி இன்று இரவு 9:30 மணியளவில் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாவது போட்டியின் சுருக்கம்:
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய வீரர்களுக்கு மோசமான தொடக்க ஆட்டம் அமைந்தது. ஆமாம், ரோஹித் சர்மா எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் சிக்ஸர் அடித்து போட்டியில் விளையாடினார்கள்.
ஆனால் ஒரு சில நிமிடங்களில் ஆட்டத்தை இழந்தார். தொடர்ந்து விக்கெட்டை இழந்த இந்திய அணியால் ரன்களை அடிக்க முடியாமல் போனது. அதனால் 19.4 ஓவர் முடிவில் 138 ரன்களை அடித்த இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தனர். பின்பு 139 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ்.
முதல் போட்டியில் மோசமாக பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது போட்டியில் அருமையாக பேட்டிங் செய்து 19.2 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 141 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதனால் 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.
இந்த டி-20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மிகவும் மோசமான நிலையில் உள்ளது தான் உண்மை. அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டரில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. அதிலும் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் மோசமான ஆட்டத்தை விளையாடி வருகிறார்.
ஆமாம், விராட்கோலி அணியில் இல்லாத காரணத்தால் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி வருகிறார். ஆனால் கடந்த சில போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் பெரிய அளவில் விளையாடுவது இல்லை. அதிலும் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் Short Ball, பவுன்சர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமப்படுகிறார்.
நேற்று நடந்த இரண்டாவது போட்டியிலும் அதே நிலை தான் அல்சாரி ஜோசப் வீசிய ஷார்ட் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார் ஸ்ரேயாஸ் ஐயர். அவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாட கூடிய தீபக் ஹூடா அணியில் தான் இருக்கிறார். ஆனால் ரோஹித் சர்மா ஏன் தீபக் ஹூடாவிற்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.