இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டேஸ் போட்டிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் இதே நேரத்தில் தான் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும், இலங்கை பெண்கள் அணியும் விளையாடி வருகின்றனர். இதுவரை மூன்று டி-20 போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
அதில் டி-20 போட்டிக்கான தொடரை கைப்பற்றிய நிலையில் இப்பொழுது இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றனர். இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்த நிலையில் ரன்களை அடிக்க திணறியது தான் உண்மை. இதுவரை 30 ஓவர் நடந்து முடிந்த நிலையில் 100 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர்.
அதில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் மிகவும் அருமையாக பவுலிங் செய்து வருகிறார். 7 ஓவர் பவுலிங் செய்து வெறும் 17 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். அதிலும் மூன்று முக்கியமான விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதனால் இலங்கை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றுள்ளது இந்திய. அதனால் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது. ஆண்கள் கிரிக்கெட் போட்டியை விட பெண்கள் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
அதற்கு என்ன காரணமாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ளே COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!