பும்ராவிற்கு பிறகு மீண்டும் ஒரு நட்சத்திர வீரர் தீடிர் விலகல் ; மும்பை ரசிகர்களுக்கு ஷாக் ;

0

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர். குறுகிய போட்டி என்றதால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது.

அதனால் இப்பொழுது இந்தியாவில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் லீக் போட்டிகள். இதுவரை 15 சீசன்கள் வெற்றி பெற்ற நிலையில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அன்று 16 சீசன் நடைபெற இருக்கிறது.

சமீபத்தில் தான் ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற்று முடிந்தது. அதில் பல முக்கியமான வீரர்களை கைப்பற்றியுள்ளனர். அதிலும் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி தான் பலமான அணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனென்றால் பும்ரா, ஆர்ச்சர், ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், ரிச்சர்ட்சன் , கேமரூன் க்ரீன் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை மொத்தம் 5 முறை கோப்பையை வென்றுள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிபட்டியலில் மோசமான இடத்தில் இருந்தது. அதேபோல தான் இந்த ஆண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடி மேல் அடியாக விழுகிறது.

ஆமாம், காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி வீரரான பும்ரா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன்-க்கு BBL விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அது பெரிய அளவில் இருப்பதால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சிரமம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2023 ஏலத்தில் 1.5 கோடி விலை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. பும்ரா, ரிச்சர்ட்சன் இல்லாததால் ஆர்ச்சர், கேமரூன் க்ரீன், ஜேசன் பெஹ்ரேன்டோர்ப் போன்ற வீரர்கள் தான் பவுலிங்-ல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here