CSK அணி Super- ஆ விளையாட மூன்று காரணம் இருக்கிறது ; பிளெமிங் ஓபன் டாக்..! அப்படி என்ன சொன்னார் ?

14வது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது, அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டி சிறப்பான முறையில் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை அடையாத மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. அதுமட்டுமின்றி அதுதான் முதல் முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் தேர்வாகாமல் வெளியேறியது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே அணியின் வீர்ரகளும் சோகத்தில் மூழ்கினார்.

ஆனால் இந்த ஆண்டு அதற்கு எதிர்மாறாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில உள்ளது. இதுவரை விளையாடி நான்கு போட்டிகளிலும் மூன்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் முதல் போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அதன்பின்னர் ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றியுள்ளது சிஎஸ்கே.

இந்த மாதிரி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாட என்ன காரணம் என்று கேள்விக்கு ஸ்டீபன் பிளெமிங் பதிலளித்துள்ளார். எங்கள் அணியின் வீரர்கள் அனைவரின் அணுகுமுறை மிகவும் சரியானதாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் எங்களை பொறுத்தவரை அவர் மைக் ஹசி. வெளியில் நிறைய அழுத்தம் இருந்தாலும், ஆனால் அவர்க்கு நாங்கள் என்றும் உறுதுணையாகவும் , நம்பிக்கை தரும் வகையில் அவருக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.

எங்களுக்கு ஆச்சரியமாக தான் இருக்கிறது. முதல் போட்டியின் தோல்விக்கு பிறகு அடுத்தடுத்த வெற்றியை கைப்பற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். அதற்கு முக்கியமான காரணம் நாங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட ஆரம்பித்துவிட்டோம்.

அதுமட்டுமின்றி கடந்த சீசனில், வீரர்கள் பேட்டிங் செய்யும்போது சில பந்தை அடிக்காமல் அதனை மிஸ் செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு இல்லாமல், ருதுராஜ் முதல் சாம் கரண் வரை அதிரடியாக மட்டுமே விளையாடி வருகின்றனர். இது டி-20 போட்டிக்கு முக்கியமான ஒன்று என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார் ஸ்டீபன் பிளெமிங்.