டேல் ஸ்டெய்ன் அறிவுரையை கேட்டு சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி கைப்பற்ற போகும் மூன்று முக்கியமான பவுலர்கள் இவர்கள் தான் ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் வருகின்ற பிப்ரவரி 2022யில் தான் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் யார் யார் எந்த அணியில் தக்கவைக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு மிகவும் மோசமான ஆண்டாக தான் இருந்தது. ஏனென்றால் முதல் 7 போட்டிகளில் விளையாடிய டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி வெறும் 1 போட்டியில் மட்டுமே வெற்றியை கைப்பற்றியது.

பின்னர் கொரோனா காரணமாக போட்டிகளை ரத்து செய்து, மீதமுள்ள போட்டிகளில் செப்டம்பர் மாதத்தில் தொடங்கியது. அப்பொழுது டேவிட் வார்னரை அணியில் இருந்து வெளியேற்ற முடிவு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி, அதனால் அவருக்கு பதிலாக கென் வில்லியம்சனை கேப்டனாக நியமனம் செய்தனர்.

இருந்தாலும் அதன்பின்னர் ஒரு பயனும் இல்லை, ஏனென்றால் 14 போட்டிகளில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் இருந்தது. அதுமட்டுமின்றி, தக்கவைப்பதில் உமர் மலிக், கென் வில்லியம்சன் மற்றும் அப்துல் சமத் போன்ற மூன்று வீரர்களை தக்கவைத்துள்ளது.

இதற்கிடையில், சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் பவுலிங் பயிற்சியாளராக தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் இடம்பெற்றுள்ளார். அதனால் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி மேல் பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

சமீபத்தில் வெளியான தகவலின் படி, இந்த மூன்று வீரர்களை டேல் ஸ்டெய்ன் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் பவுலர்களாக ஏலத்தில் கைப்பற்ற அறிவுரை கூறியுள்ளதாக தெரிகிறது. அதில் முதல் வீரர் ட்ரென்ட் போல்ட் ; இவர் 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியிலும், 2017ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும், 2020 மற்றும் 2021 ஆகிய இரு ஆண்டுகளும் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் விளையாடி வந்துள்ளார் ட்ரென்ட் போல்ட் .

டிரென்ட் போல்ட் கடந்த ஐபிஎல் 2021யில் மொத்தமாக 14 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ஒரு ஓவருக்கு 7.90 என்ற விகிதத்தில் ரன்களை கொடுத்துள்ளார்.

இரண்டாவதாக ராபாடா, தென்னாபிரிக்கா அணியை சேர்ந்த வீரரான ராபாட கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021வரை டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முக்கியமான பவுலராக விளையாடி வந்துள்ளார். ஆனால் அவரை டெல்லி அணி தக்கவைக்காதது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ராபட மொத்தமாக 15 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார், இவரை சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் எடுக்க டேல் ஸ்டெய்ன் அறிவுரை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்றாவதாக இந்திய மற்றும் இளம் வீரரான கார்த்திக் தியாகிவை சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி கைப்பற்ற போவதாக தெரிகிறது. இவர் 2020ஆம் ஆண்டு தான் ஐபிஎல் டி-20 போட்டிகளில் அறிமுகமாகியுள்ளார். 2020 மற்றும் 2021 ஆகிய இரு ஆண்டுகளும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தான் விளையாடி வந்துள்ளார்.

ஆகையால், கார்த்திக் தியாகி, ராபாட மற்றும் டிரென்ட் போல்ட் போன்ற மூன்று வீரர்களை ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி கைப்பற்ற டேல் ஸ்டெய்ன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது…!