Ind vs SL தொடர் போட்டிகள் : நேற்று இரவு முதல் தொடங்கியது இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடர்.
நேற்று இரவு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஷனாக தலைமையிலான இலங்கை அணியும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்த வந்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 162 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது.
ஆமாம், இலங்கை அணிக்கு பேட்டிங் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்த வந்தனர். இறுதி ஓவர் வரை போராடிய இலங்கை அணி 160 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இறுதியாக 2 ரன்கள் வித்தியாசத்தில் தீரில் வெற்றியை கைப்பற்றியது இந்திய. அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.
இந்திய அணியின் எதிர்காலமே இவர் தான் :
நேற்று நடந்த போட்டியில் இளம் வீரரான உம்ரன் மலிக், அருமையாக பவுலிங் செய்து இலங்கை அணிக்கு ஆபத்தான வீரர் என்று நிரூபித்துள்ளார். இப்பொழுது இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிவேகமாக பவுலிங் செய்யும் ஒரே வீரராக திகழ்கிறார் உம்ரன் மலிக். நேற்று நடந்த போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் ஷனாக விக்கெட்டை கைப்பற்றும்போது 155 கிமீ வேகத்தில் பவுலிங் செய்துள்ளார். அதன் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு சர்வதேச டி-20 போட்டிக்கான இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் இஷான் கிஷான், ஷிவம் மாவி, சுப்மன் கில், உம்ரன் மலிக், ராகுல் திரிபதி மற்றும் முகேஷ் குமார் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அடுத்த போட்டி நாளை இரவு 7 மணியளவில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா மைதானத்தில் இரண்டாவது டி-20 போட்டிகளில் விளையாட உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, இன்னும் ஒரு போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை வெல்ல சுலபமாக இருக்கும்.
Umran Malik on Fire🔥
Umran malik took wicket of Dashun Shanaka by bowling at 155 Km.. OMG! #UmranMalik #INDvSL pic.twitter.com/yqVeADBUxV— NAFISH AHMAD (@nafeesahmad497) January 3, 2023
Umran Malik not just spitting fire but also improving his line and length 👏
— Irfan Pathan (@IrfanPathan) January 3, 2023
1️⃣5️⃣5️⃣ reasons to love Umran Malik 💙
The #JammuExpress‘ fastest delivery in 🇮🇳 colours!#INDvSL #TeamIndia #OrangeArmy pic.twitter.com/t60mdgQg5V
— SunRisers Hyderabad (@SunRisers) January 3, 2023