18வது போட்டியில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்த நிலையில் 133 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதில் நிதிஷ் ரான 22 ரன்கள், சுப்மன் கில் 11 ரன்கள், த்ரிப்தி 36 ரன்கள், நரேன் 6 ரன்கள், மோர்கன் 0 ரன்கள், தினேஷ் கார்த்திக் 25 ரன்கள் மற்றும் ஆன்ட்ரே ரசல் 9 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.
பின்பு 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.5 ஓவர் முடிவில் 134 ரன்களை எடுத்துள்ளது. அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதில் ஜோஸ் பட்லர் 5 ரன்கள், ஜெய்ஸ்வால் 22 ரன்கள், சஞ்சு சாம்சன் 42 ரன்கள், சிவம் துபே 22 ரன்கள் மற்றும் ராகுல் திவேத்திய 5 ரன்கள் அடித்துள்ளனர்.
வெற்றியை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் 2 போட்டியில் மட்டுமே வென்று புள்ளிபட்டியலில் 6வது இடத்திலும், தோல்வியை சந்தித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8வது இடத்திலும் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்யும்போது 12வது ஓவர் பந்து விசியுள்ளார் வருண் சக்கரவத்தி, அதனை எதிர் கொண்ட ராகுல் திவேத்திய சிக்சர் அடிக்க முயன்றார். அப்பொழுது அந்த பந்தை சுப்மன் கில்,ஓடி வந்து லாபகமாக பிடிக்க முயன்றார்.
ஆனால் எங்கு சிக்ஸர் போய்விடுமோ என்று நினைத்த போது அந்த பந்தை உள்ளே தட்டிவிட்டு ரன்களை சேமித்துள்ளார் சுப்மன் கில். அதன் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது. வீடியோ;