இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த மூன்று ஒருநாள் போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி தொடரை வென்றுள்ளனர்.


அதனை அடுத்து இப்பொழுது முதல் டெஸ்ட் போட்டி இரு தினங்களுக்கு முன்பு தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸ் விவரம் :
டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல் மோசமான தொடக்க ஆட்டம் அமைந்தது. ஒருநாள் போட்டியை போலவே குறைவான ரன்களை தான் இந்திய கிரிக்கெட் அணி அடிக்கும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்த நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் புஜாராவின் அசத்தலான பேட்டிங் இந்திய அணிக்கு ரன்கள் குவித்தன.முதல் இன்னிங்ஸ் முடிவில் 133.5 ஓவர் விளையாடிய இந்திய 404 ரன்களை அடித்தனர்.


அதில் அதிகபட்சமாக புஜாரா 90, ரிஷாப் பண்ட் 46, ஸ்ரேயாஸ் ஐயர் 86, ரவிச்சந்திரன் அஸ்வின் 58, குல்தீப் யாதவ் 40 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய பங்களாதேஷ் அணி மோசமான பேட்டிங் தான் அமைந்தது.
தொடக்கத்தில் இருந்து பங்களாதேஷ் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர். வெறும் 55.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த பங்களாதேஷ் அணி வெறும் 150 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணி இப்பொழுது 254 ரன்கள் முன்னிலையில் உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சாகிர் ஹசன் 20, லிட்டன் தாஸ் 24, ரஹீம் 28, மெஹிடி 25 ரன்களை அடித்துள்ளனர்.


அருமையான சுழல் பந்து வீச்சால் தான் பங்களாதேஷ் அணி சுருண்டது :
கடந்த சில மாதங்களாவே இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் மிகவும் கவலையான நிலையில் தான் இருக்கிறது. குறிப்பாக ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் பவுலிங் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாத காரணத்தால் அரையிறுதி போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளது இந்திய.
ஆனால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 16 ஓவர் பவுலிங் செய்து 40 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 5 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுவும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை தொடர்ச்சியாக குல்தீப் யாதவ் கைப்பற்றியதால் இந்திய அணியிக்கு சுலபமாக மாறியது.