இந்திய வீரர்களை திணறடித்த ஜிம்பாபே பவுலர் ; பா…! செமையாக பவுலிங் செய்து 5 விக்கெட்டை கைப்பற்றிய ஜிம்பாபே வீரர் ;

0

நேற்று மதியம் 12:45 மணியளவில் தொடங்கிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ரெஜிஸ் தலைமையிலான ஜிம்பாபே அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்க ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் பேட்டிங் செய்த சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் போன்ற இருவரும் சிறப்பான ஆட்டத்தை விளையாடிய நிலையில் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தன.

ஆனால் ஒரு கட்டத்தில் இவர்களால் பேட்டிங் செய்ய முடியாமல் ஜிம்பாபே பவுலரான பிராட் ஏவன்ஸிடம் விக்கெட்டை பரிகொடுத்தனர். ஆமாம், அதுவும் ஷிகர் தவான், கே.எல்.ராகுல், சுப்மன் கில், தீபக் ஹூடா மற்றும் ஷர்டுல் தாகூர் போன்ற வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றினார் பிராட் எவன்ஸ்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 289 ரன்களை அடித்தனர். அதில் ஷிகர் தவான் 40, ராகுல் 30, சுப்மன் கில் 130, இஷான் கிஷான் 50, சஞ்சு சாம்சன் 15 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 290 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஜிம்பாபே கிரிக்கெட் அணி.

ஜிம்பாபே அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமையவில்லை என்றாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சிக்கந்தர் ரச சிறப்பாக பேட்டிங் செய்து சதம் அடித்துள்ளார். ஜிம்பாபே அணியில் விளையாடிய அனைவரும் முடிந்தவரை ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் செய்தனர்.

ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. ஆமாம், 49.3 ஓவர் வரை விளையாடிய ஜிம்பாபே கிரிக்கெட் அணி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 276 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாபே அணியை வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி.

இதில் ஜிம்பாபே அணி விக்கெட்டை மட்டும் இழக்காமல் இருந்திருந்தால் நிச்சியமாக வெற்றியை கைப்பற்றிருக்க அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும். ஜிம்பாபே அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 45, சிக்கந்தர் ரச 115, ரெஜிஸ் சகபவா 16, பிராட் எவன்ஸ் 28 ரன்களை அடித்துள்ளனர்.

மொத்தமாக நடைபெற மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் ஜிம்பாபே அணியை வாஷ் அவுட் செய்தது இந்திய கிரிக்கெட் அணி என்பது குறிப்பிடத்தக்கது..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here