பட்டைய கிளப்பிய இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் ; பா..! செம கம்பேக் இதுதான் ; இனிமேல் இந்திய அணிக்கு பயமே வேண்டாம் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. ஒரு பின் ஒருவராக விக்கெட்டை இழந்த காரணத்தால் ரன்கள் குறைவாகவே இருந்தது.

இருப்பினும் தொடக்க வீரரான ரிஸ்வான் 43 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளார். இறுதி ஓவர் வரை போராடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 147 ரன்களை அடித்துள்ளனர். அதில் ரிஸ்வான் 43, பாபர் அசாம் 10, பாகார் ஜமான் 10, அஹமத் 28, ஆசிப் அலி 9, ஹரிஸ் ரவூப் 13 ரன்களை அடித்துள்ளனர்.

இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணி 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளனர். கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணிக்கு தக்க பதிலடி கொடுக்குமா ? இந்திய கிரிக்கெட் அணி ?

அட்டகாசமான கம்பேக் கொடுத்த இந்திய அணியின் ஆல் – ரவுண்டர்:

இந்திய அணியின் முன்ணனி வேராக திகழும் ஹர்டிக் பாண்டிய கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் விளையாடவில்லை. அதுவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிறகு பவுலிங் செய்ய முடியாமல் தவித்து வந்தார் ஹர்டிக் பாண்டிய. இருப்பினும் கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வானது அதிர்ச்சியாக இருந்தது.

அப்பொழுது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பவுலிங் செய்ய வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால் இன்றைய (ஆசிய கோப்பை) போட்டியில் விளையாடிய ஹர்டிக் பாண்டிய 4 ஓவர் பவுலிங் செய்து 25 ரன்களை கொடுத்த நிலையில் 3 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுவும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here