தமிழக அணியை கதிகலங்க வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிங்கம் ; ஐபிஎல் போட்டிக்கு முன்னோட்டம் ஆ?

0

இந்திய மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் 3 – 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியை வாஷ்-அவுட் செய்துள்ளது இந்திய. அதனை அடுத்து இன்று முதல் மூன்று டி-20 போட்டிக்கான தொடரில் விளையாட உள்ளனர். இதில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், சண்டனர் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோத உள்ளனர்.

நீண்ட நாட்களாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார் ஆல் – ரவுண்டர் ;

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் – ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் இருக்கிறார். ஆனால், ரஞ்சி கோப்பை போட்டியில் பட்டைய கிளப்பி விளையாடி வருகிறார் ரவீந்திர ஜடேஜா. அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான தொடரில் விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

கடந்த 24ஆம் தேதி அன்று ஆரம்பித்த போட்டியில் பிரதோஷ் பால் தலைமையிலான தமிழ்நாட்டு அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சவுராஷ்டிரா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய தமிழக அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 324 ரன்களை அடித்தனர். ஆனால் முதல் இன்னிங்ஸ்-ல் விளையாடிய சவுராஷ்டிரா அணிக்கு சரியான பேட்டிங் அமையாத காரணத்தால் 192 ரன்களை மட்டுமே அடித்தனர்.

ஆனால், தமிழக அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸ் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. ஆமாம் அதற்கு முக்கியமான காரணம் ரவீந்திர ஜடேஜாவின் அசத்தலான பவுலிங் தான் காரணம்.17.1 ஓவர் பவுலிங் செய்த ஜடேஜா 53 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 7 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதனால் தமிழக அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை.

இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் சவுராஷ்டிரா அணி 4 ஓவர் முடிவில் 4 ரன்களை அடித்த நிலையில் 1 விக்கெட்டையும் இழந்துள்ளனர். இப்படி சிறப்பாக கம்பேக் கொடுத்த ரவீந்திர ஜடேஜா இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாட வாய்ப்புகள் இருக்கிறதா ? இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here