தொடர் போட்டி :
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த டி-20 தொடரில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.


மூன்றாவது ஒருநாள் போட்டி :
நேற்று இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட்டை அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி வழக்கம் போலவே பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை.இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான பரிஸ்டோவ், ஜோவ் ரூட் ஆகிய இருவரும் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தனர். அதனால் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.


இருப்பினும் அதன்பின்னர் விளையாடிய அனைத்து வீரர்களும் பார்ட்னெர்ஷிப் செய்து அவர்களால் முடிந்தவரை ரன்களை அடித்து குவித்தனர். அதனால் 45.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் இங்கிலாந்து அணியால் 259 ரன்களை அடிக்க முடிந்தது.
அதில் ஜேசன் ராய் 41, பென் ஸ்டோக்ஸ் 27, பட்லர் 60, மொயின் அலி 34, லிவிங்ஸ்டன் 27, வில்லே 18, ஓவெர்ட்டன் 32 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 260 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. இங்கிலாந்து அணியை போலவே டாப் மூன்று பேட்ஸ்மேன்களும் ஒருவர் பின் ஒருவராக ஆட்டம் இழந்தனர்.


இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்குமா என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட தொடங்கினார். ஆனால், எதிர்பாராத வகையில் 16 ரன்களை அடித்து ஆட்டம் இழந்தார். இருப்பினும் நம்பியுடன் விளையாடிய ரிஷாப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டிய செய்த சிறப்பான பார்ட்னெர்ஷிப் தான் ரன்களை அடிக்க காரணமாக இருந்தது.
இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 200 ரன்களை அடித்துள்ளனர்.அதிலும் ரிஷாப் பண்ட் இறுதிவரை விளையாடி ஆட்டம் இழக்காமல் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். அதனால் 42.1 ஓவர் முடிவில் 261 ரன்களை அடித்த நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய.


அதில் ரோஹித் சர்மா 17, ஷிகர் தவான் 1, விராட்கோலி 17, ரிஷாப் பண்ட் 125, சூரியகுமார் யாதவ் 16, ஹர்டிக் பாண்டிய 71, ரவீந்திர ஜடேஜா 7 ரன்களையும் அடித்துள்ளனர். இப்பொழுது 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் ஒருநாள் போட்டிக்கான தொடரையும் கைப்பற்றியுள்ளது.