இங்கிலாந்து அணிக்கு எதிரியாக மாறிய நான்கு இந்திய வீரர்கள் ; மாஸ் வெற்றியை கைப்பற்றியது இந்திய ;

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் :

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான சீரியஸ் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த டி-20 போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இன்று மாலை 5:30 மணியளவில் லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. முதல் ஐந்து விக்கெட்டை தொடர்ந்து விக்கெட்டை இழந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அந்த பயத்தை தொடர்ந்து காட்டிய இந்திய பவுலர்களால் இங்கிலாந்து அணியை விரைவாக விக்கெட்டை கைப்பற்றினர்.

அதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் (30), மொயின் அலி 14, வில்லே 21 ரன்களை அதிகமாக அடித்துள்ளனர். பின்பு 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ஆனால் விக்கெட்டை கைப்பற்றாமல் இங்கிலாந்து அணி திணறியது…!

வெறும் 18.4 ஓவர் முடிவில் டி-20 போட்டி போல அதிரடியாக விளையாடிய இந்திய அணி 10 விக்கெட்டை வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. அதனால் 1 – 0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற முக்கியமான நான்கு வீரர்கள் உள்ளனர். அது பவுலர் இருவர் மற்றும் பேட்ஸ்மேன் இவர்கள் தான் ; ஆமாம், இந்திய அணயின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, ஷமி போன்ற வீரர்களின் அருமையான பந்து வீச்சால் ரன்களை அடிக்க முடியாமல் திணறியது இங்கிலாந்து அணி.

பும்ரா 6 விக்கெட்டையும், ஷமி 3 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். அதேபோல இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவானின் அருமையான தொடக்க ஆட்டத்தால் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

அதில் ரோஹித் சர்மா 58 பந்தில் 76 ரன்களையும், ஷிகர் தவான் 54 பந்தில் 31 ரன்களையும் அடித்துள்ளனர். இதனால் 18.4 ஓவர் முடிவில் 114 ரன்களை அடித்தது இந்திய. இதேபோல சிறப்பான பார்ட்னெர்ஷிப் அமைந்தால் அடுத்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.