குரூப் 2 : இன்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி முதலில் டார்கெட் செட் செய்ய பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்து வருகின்றனர். இதுவரை இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மொத்தமாக 11 சர்வதேச டி-20 போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் இந்திய அணி 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 3 போட்டிகளிலும் வென்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் முதலில் பவுலிங் செய்யும் அணி தான் போட்டியில் வெல்ல அதிகவைப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்லுமா ? இல்லையா ?
பாகிஸ்தான் வீரர்களுக்கு பயத்தை கட்டிய தினேஷ் கார்த்திக்:

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐபிஎல் 2022 போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான ஆட்டம் அமைவருக்கும் ஆச்சரியமாக தான் இருந்தது. அதிலும் குறிப்பாக பெங்களூர் அணியின் பினிஷராக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதனால், மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
அதுமட்டுமின்றி, இப்பொழுது இந்திய அணியின் முக்கியமான ப்ளேயிங் 11 வீரர்களில் ஒருவராக தினேஷ் கார்த்திக் விளையாடி வருகிறார். பேட்டிங் மட்டுமின்றி இந்திய அணியின் விக்கெட் கீப்பராகவும் விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். மற்ற போட்டிகளை காட்டிலும் இன்றைய போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று தான்.
இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் செய்த செயல் இணையத்தை கலக்கி வருகிறது. ஆமாம், முதல் ஓவர் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பவுலிங் செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது 5வது பந்தை வீசிய போது ரிஸ்வான் எதிர்கொண்டார். அப்பொழுது எதிர்பாராத வகையில் அது wide ஆனது.
— Cricket (@crick37484) October 23, 2022
இருப்பினும் பந்து தொலைவில் சென்றதால் அது பவுண்டரிக்கு சென்றிருக்கும். ஆனால் அதனை சரியாக புரிந்த கொண்ட தினேஷ் கார்த்திக் பந்தை தாவிப்பிடித்தார். அதனால் 4 ரன்கள் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை பொறுத்தவரை கட்டுப்படுத்தும் ஒவ்வொரு ரன்களும் இந்திய அணி வெல்ல முக்கியமான காரணமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 15 ரன்களை அடித்துள்ளனர். அதில் ரிஸ்வான் 4, பாபர் அசாம் 0, ஷான் மசூத் 9* ரன்களை அடித்துள்ளனர். அதுமட்டுமின்றி 2 விக்கெட்டையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷதீப் சிங் தான் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments